நமது முன்னோர்கள் அந்த காலத்திலயே இயற்கையோடு ஒன்றியே உடல் நலத்தையும் பேணிக் காத்து வந்தனர். அவர்கள் நிறைய மூலிகைகளை தங்கள் உடல் ஆரோக்கியத்திற்காக பயன்படுத்தி வந்தார்கள். இன்றளவும் உலகின் பல இடங்களில் ஆயுர்வேத மருத்துவம் பேரும் புகழும் பெற்று தலைசிறந்து விளங்கி வருகிறது. கெமிக்கல் மருத்துவ முறைக்கு பதிலாக இந்த ஆயுர்வேத மூலிகை மருந்துகள் மக்களிடையே மிகவும் பரவலாக காணப்படுகிறது. சில இனத்தவர்கள் மற்றும் சில நாட்டினர் இந்த மூலிகை முறைகளை பாரம்பரியமாக பின்பற்றி வருகிறார்கள்.

உங்களுக்கு நன்றாகவே தெரியும் தாய்லாந்து நாட்டில் உள்ள துளசி மூலிகை மிகவும் புகழ் பெற்றது. நமது இந்தியாவிலும் தாய்லாந்திலும் ஏராளமான மருத்துவ குணங்கள் அடங்கிய மூலிகைகள் உள்ளன. இந்தியாவில் காணப்படும் மருத்துவ மூலிகைகள் ஏராளமான பிணிகளுக்கும் மருந்தாக பயன்படுகிறது. அப்படிப்பட்ட ஒன்று தான் இந்த வில்வம் இலை. இந்த வில்வம் இலை கடவுள் வழிபாட்டுக்கு மாத்திரம் இல்லாமல் ஏராளமான தனிச் சிறப்புகளை உள்ளடக்கியுள்ளது.

மஞ்சள் காமாலை நோயால் அவதியுற்று வரும் நபர்கள் வில்வ மரத்தில் இருக்கும் இளம் வில்வ இலைகளை சுமார் 10 கிராம் முதல் 15 கிராம் அளவு இருக்குமாறு எடுத்துக்கொண்டு., அதோடு சுமார் 10 மிளகை சேர்த்து அரைத்து இருவேளை சாப்பிட்டு வந்தால் மஞ்சள் காமாலை நோயானது குணமடையும்.இரத்த சோகை பிரச்னையால் அவதியுறும் நபர்கள் வில்வ பழத்தை காயவைத்து பொடியாக அரைத்து பசும்பாலில் சேர்த்து காய்ச்சி தினமும் இரண்டு வேலை சாப்பிட்டு வந்தால் இரத்த சோகை பிரச்சனையானது குணமடையும்.

கர்ப்பமான பெண்களுக்கு கர்ப்ப காலத்தில் ஏற்படும் வாந்தி மற்றும் குமட்டல்., இரத்த சோகை பிரச்சனையை நீக்குவதற்கு ஒரு தே.கரண்டி அளவிற்கு வில்வ பழத்தின் பொடியை தேனுடன் சேர்த்து சாப்பிட்டு வந்தால் இந்த பிரச்சனைகள் அனைத்தும் குணமடையும்.

டைபாய்டு நோயை குணப்படுத்துவதற்கு வில்வ இலையை நீர் சேர்க்காமல் அரைத்து எடுத்து நீரில் சேர்த்து கொதிக்க வைத்து குழம்பு போன்று சுண்டும் பக்குவத்தில் வந்தவுடன்., தேனை சேர்த்து மூன்று வேலை என்று தினமும் சாப்பிட்டு வந்தால் டைபாய்டு நோயானது உடனடியாக குணமடையும்.

ஞபாக சக்தியை அதிகரிப்பதர்க்கு வில்வ பழத்தை எடுத்து அதனுடன் கற்கண்டை சேர்த்து தினமும் இரவு தூங்குவதற்கு முன்னதாக சாப்பிட்டு வந்தால் மனது அமைதியாகி., நமது ஞாபக சக்தியை அதிகரிக்கும்.

சர்க்கரை நோயால் அவதியுறும் நபர்கள் தினமும் ஐந்து இலைகளை மென்று சாப்பிட்டு வந்தால் சர்க்கரை நோயானது உடனடியாக குணமாகும். வில்வப்பழத்தை பொடியாக அரைத்து வைத்து சுமார் 10 கிராம் அளவிற்கு எடுத்து கொண்டு 50 கிராம் நெய்யுடன் மஞ்சள் சேர்த்து நீரில் கலந்து பருகி வந்தால்., எலும்பு முறிவு பிரச்சனையானது உடனடியாக நீங்கும்.