அழகாக இருக்க யாருக்கு தான் ஆசை இருக்காது அதிலும் பெண்கள் சொல்லவே அவசியம் இல்லை. தேவதை போல் இருந்தாலும் தங்களுக்கு அந்த அழகு போதாது என்றே நினைப்பார்கள். சில பெண்கள் அழகாக இருப்பார்கள் ஆனால் அவர்களது அழகை முகத்தில் இருக்கும் முகப் பருக்கள், முகப் பரு வந்த அடையாளம், கொழுப்பு திட்டுகள், போன்றவை இருக்கும். சிலர் கறுப்பாக இருக்கிறோமே என கவலை படுவார்கள்.


இவை எல்லாவற்றிக்கும் ஒரே தீர்வை தான் இன்று பார்க்கப் போகிறோம். வாங்க பார்க்கலாம்..!இந்த மருத்துவ குறிப்பு உங்கள் முழங்கால், முழங்கை போன்றவற்றில் இருக்கும் கறுமையையும் போக்குகிறது. இதற்கு தேவையானவை: எலுமிச்சை மற்றும் அரிசி மா, மற்றும் பால்.

அரிசியை ஊற வைத்து அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள். முதலில் எலுமிச்சையை இரண்டாக வெட்டி முகம், கை, கால், போன்ற இடங்களில் எலுமிச்சை சாறை பஞ்சு ஒன்றில் தொட்டு மசாஜ் செய்யுங்கள். அப்படியே 10 மினிடம் விட்டு பின் குளிந்த நீரால் கழுவுங்கள்.

அதன் பின் அரிசி மாவு மற்றும் பால் கலந்து பேஸ்ட் பதத்திற்கு செய்துகொள்ளுங்கள். பின் முகத்தில் பேஸ் பக் போல் போடுங்கள் அவ்ளோ தான். இப்படி மூன்று நாள் தொடர்ந்து செய்யும் போது உங்கள் முகத்தின் வித்தியாசத்தை நீங்களே பார்த்து வியந்து போவீர்கள்..!