சைவம், அசைவம் என நம் உணவுக் கலாச்சாரத்தை இரண்டாக பிரிக்கலாம். சிலருக்கு சைவம் என்றால் கொள்ளை இஷ்டமாக இருக்கும். சிலர் அசைவப் பிரியர்களாக இருப்பார்கள்.

அப்படியான அசைவ பிரியர்களும் கூட மீன், கோழி, ஆட்டு இறைச்சி என்றே மூழ்கிக் கிடப்பார்கள். ஆனால் அதையெல்லாம் விட ஆண்கள் கட்டாயம் சாப்பிட வேண்டிய இறைச்சி ஒன்று இருக்கிறது. அதுதான் காட்டுப்பன்றியின் இறைச்சி.

இதை ஆண்கள் மாதம் ஒருமுறையாவது சாப்பிட வேண்டும். சிவப்புத்தன்மை கொண்ட இந்த இறைச்சி சாப்பிடுவதை மருத்துவர்களும் கூட பரிந்துரை செய்கின்றனர். இந்த இறைச்சியில் உள்ள செலினியம் நம் உடல் வலிமையை அதிகரிக்கச் செய்கிறது.

இதேபோல் பன்றி இறைச்சியில் விட்டமின் பி 6 உள்ளது. இது கர்ப்பினி பெண்களுக்கும் நல்ல சக்தியைத் தரும். இதன் மூலம் இழந்த நம் சக்தியைக் கூட திரும்பப்பெற முடியும். இத்தகைய சிறப்பு வாய்ந்த பன்றி இறைச்சியை மாதம் ஒருதடவை அரைகிலோ வீதம் ஆண்கள் சாப்பிட்டு வந்தாலே அவர்கள் உடல் வலிமையாகிவிடும்.