பொலிவான, அழகான, மிருதுவான, எந்த பிரச்சனையும் இல்லாத, ஆரோக்கியமான சருமம் வேண்டுமென்று யாருக்கு தான் ஆசை இருக்காது.அத்தகைய சரும பராமரிப்பிற்கு சற்று அக்கறையும், செலவும் செய்ய வேண்டியதிருக்கும்.


அதுவும் இந்த ஊரடங்கு காலத்தில் சரும பராமரிப்பிற்கு நேரம் இருந்தாலும், நாம் உபயோகிக்கும் சில பொருட்களை வாங்க முடியாமல் அவதிப்பட்டவர்கள் தான் அதிகம்.அதற்காக தான் இந்த ஊரடங்கு அனைத்து பெண்களுக்குமே செலவே இல்லாத அற்புத அழகு பராமரிப்பு பொருட்களை நமக்கு அறிமுகப்படுத்தியுள்ளது.அது தான் சமையலறை பொருட்கள். நம் வீட்டு சமையல் அறையில் உள்ள ஒவ்வொரு பொருளுக்கு அழகை மேம்படுத்தக்கூடிய ஏதோ ஒரு பண்பு உள்ளது.

அந்த வகையில் நம் வீட்டு சமையறையில் வீணாக தூக்கி எறியும் சில பொருட்களை வைத்து நம் அழகை எவ்வாறு பாதுகாத்து கொள்வது என்று தான் இப்போது தெரிந்து கொள்ள போகிறோம்.பொதுவாக அனைவருமே உருளைக்கிழங்கு சமைக்கும் போது அதன் தோலை சீவி தூக்கி எறிந்துவிடுவர். ஆனால், அந்த தோலில் எத்தகைய பலன்கள் மறைந்துள்ளது என்று தெரிந்தால் யாருமே அதை தூக்கி எரிய மாட்டீர்கள்.


அட ஆமாம். சீவிய தோலை கொண்டு முகத்தில் பரு உள்ள இடத்திலும், கருவளையம் உள்ள இடத்தில் தேய்த்து சிறிது நேரம் கழித்து கழுவி விடவும். உருளைக்கிழங்கு தோலை பேஷ் பேக்காக கூட போடலாம்.

அப்படி செய்வதன் மூலம் சருமத்திற்கு தேவையான ஊட்டச்சத்து முழுவதுமாக கிடைத்திடும். உருளைக்கிழங்கு தோலை அரைத்து, பேஸ்ட் போல செய்தும் முகத்தில் தடவலாம்.உருளைக்கிழங்கு தோலை சரும பராமரிப்பிற்கு பல்வேறு வகைகளில் பயன்படுத்தலாம். ஆனால், அவற்றை பயன்படுத்துவதற்கு முன்பு நன்கு கழுவி சுத்தம் செய்திட மறவாதீர்கள்.