உங்களுக்கு பிடித்த காலம் எதுனு..? யார்கிட்ட கேட்டாலும், சின்ன வயசுல இருந்த காலத்தைதாங்க சொல்லுவாங்க..! அவ்வளவு அழகிய நியாபகங்களை கொண்டது அந்த இளமை பருவம். பலவித விளையாட்டுகள், வித விதமான உணவுகள், அரிய வகை பழங்கள் இப்படி நிறைய குட்டி குட்டி அழகான விஷியங்கள் நிறைந்ததே அந்த காலம். அறிய வகை பழங்கள்னு சொன்னதும் உங்களுக்கு ஞாபகம் வந்தது இந்த இலந்தை பழதம் தானே..?!


பள்ளிக்கூடத்துக்கு வெளியில எப்போவும் ஒரு தள்ளுவண்டிக்காரர் இந்த பழத்தை கூவி கூவி வித்துட்டு இருப்பார். அப்போ அதனுடைய ஆரோக்கிய பயன்கள் தெரியாமலையே சாப்பிட்டு இருப்போம். ஆனால் இலந்தை பழத்துக்குள் ஒரு பெரிய மருத்துவ குறிப்பே இருக்குனு ஆராய்ச்சிகள் சொல்லுதுங்க. சரி, வாங்க என்னென்ன மருத்துவ பயன்கள்னு தெரிஞ்சிக்கலாம்.

சிப்பிக்குள் முத்து போல..!
சிப்பிக்குள் முத்தா…! அப்படினு ஆச்சரியமா பாக்குறீங்களா..? உண்மைதாங்க இந்த சின்ன பழத்துக்குள்ள எக்கசக்க மருத்துவ பயன்கள் இருக்குங்க. வைட்டமின் எ,பி,சி,டி போன்றவை கண்களுக்கும், பற்களுக்கும், இதயம் சார்ந்த பிரச்சனைகளுக்கும் அதிக பயன் தர கூடியவை. மேலும் இதில் உள்ள இரும்பு சத்து ரத்த சோகை போன்ற நோய்களை குணப்படுத்தும். எப்போதுமே அந்தந்த கால நிலையில் கிடைக்கும் பழங்களை சாப்பிடுவதே உடலுக்கு அதிக நலனை தரக்கூடும்.

பித்த நீர்
பித்தம் அதிகம் உடலில் சேர்ந்தால் பல்வேறு உடல் உபாதைகளை உருவாக்கும். பசியின்மை, வயிற்று கோளாறு ஆகியவை இந்த பித்த நீர் பிரச்சனையால் வரக்கூடியவை. இலந்தை பழம் உடலில் அதிகப்படியாக உள்ள பித்த நீரை குறைக்க வழி செய்கிறது. அதோடு சேர்த்து தேவையற்ற கொழுப்புகளையும் கரைக்க கூடிய ஆற்றல் பெற்றது. இதனால் ரத்தம் சீர்கேடு அடையாமல் பாதுகாக்க முடியும்.

எலும்புகளுக்கு
இலந்தை பழத்தில் அதிக அளவில் கால்சியம் உள்ளதால், பற்களுக்கு மிகுந்த பலத்தை ஏற்படுத்தும். விழுந்தவுடனே எலும்பு முறிவு ஏற்படக்கூடியவர்கள் இதனை சாப்பிட்டால் எலும்புகள் உறுதியடையும். மேலும் மூளையின் ஆற்றலை அதிகரித்து எப்போதும் சுறுசுறுப்பை தரும். கல்லீரல் சம்பந்தமான பிரச்சனைகளை விரைவில் குணப்படுத்தும்.

இளநரை
இப்போதெல்லாம் மிக சிறிய வயதிலேயே அதிக பேருக்கு வர கூடிய பிரச்சனை இளநரைத்தான். இதற்காக எவ்வளவோ மருந்துகள் பயன்படுத்தியும் தீர்வு கிடைக்கவில்லையா..? இதோ இலந்தை இலைகள் இருக்கிறதே. இலந்தை இலையில் இளநரைகளை கருப்பாகும் தன்மை உள்ளது. இது வெள்ளை முடிகள் வளர்வதை தடுக்க செய்கிறது. மேலும் முடியின் போஷாக்கை அதிகரிக்கிறது.

மாதவிடாய்
மாதவிடாய் காலங்களில் அதிக ரத்த போக்கு ஏற்பட கூடியவர்கள் இலந்தை பழத்தை சாப்பிட்டால் ரத்த போக்கு சீராகும். அத்துடன் மாதவிடாயின் போது ஏற்பட கூடிய வயிற்று வலியையும் சரி செய்யும். மாதவிடாய் முற்றிலுமாக நிற்க போகும் மெனோபாஸ் காலகட்டத்தில் அதிக உதிர போக்கு இருந்தால் இலந்தை சாப்பிட்டாலே நின்று விடும். மாதவிடாய் சார்ந்த சில பிரச்சனைகளுக்கு இலந்தை உற்ற நண்பனாய் திகழ்கிறது.

மலசிக்கல்
இன்றைய காலகட்டத்தில் அதிக பேருக்கு இருக்க கூடிய ஒரு கடுமையான நிலை மலச்சிக்கலே. தேவையற்ற உணவுகளை சாப்பிடுவதால் இந்த நிலைக்கு வந்துவிட்டு கஷ்டப்படுபவர்களா ஏராளம். குடலில் உள்ள பிரச்சனைகளாலே மலசிக்கல் ஏற்படுகிறது. இலந்தை பழத்தை சாப்பிட்டு வந்தால் உங்களின் நாள்பட்ட மலசிக்கல் குணமடையும். அதோடு சேர்த்து ஜீரண மண்டலத்தையும் ஆரோக்கியமாக வைக்கும்.

குறிப்பு 1
ஒரு கைப்பிடி இலந்தை பழத்தை எடுத்து கொண்டு 1 லிட்டர் தண்ணீரில் நன்றாக சூடு செய்யவும். பின்பு 1/2 லிட்டராக வரும் வரை கிண்டிவிட்டு அதனுடன் 2 டீஸ்பூன் தேன் கலக்கவும். இந்த கலவையை தினமும் காலையில் சாப்பிட்டு வந்தால் மூளையின் மந்த தன்மையை சரி செய்யும். அதோடு மூளை அதிவேகமாக செயல்படவும், எப்போதும் சுறுசுறுபாக இருக்கவும் இலந்தை பயன்படுகிறது.

குறிப்பு 2
உங்கள் கைகளில் அடிக்கடி வியர்க்கிறதா..? இதனால் மிகவும் சங்கடபடுகிறீர்களா..? கவலை வேண்டாம்…இலந்தை இலையே போதும். சிறிது இலந்தை இலைகளை எடுத்து கொண்டு ,நன்கு கசக்கி சாற்றை கையில் விடவும். இவ்வாறு செய்தால் கைகளில் ஏற்படும் வியர்வை குறையும். மேலும் இளநரை உள்ளவர்கள் இந்த இலைகளை தலையில் தேய்த்து குளித்தால் முதுமை அடைந்த உங்கள் முடிகள் விரைவிலேயே இளமையடையும்.