உங்களை சோர்வடைய செய்யும் இரத்தசோகை!

நமது உடலில் உள்ள இரத்தத்தில் சிவப்பணுக்கள் மற்றும் வெள்ளை அணுக்கள் என இரண்டு வகையான இரத்த அணுக்கள் உள்ளன. இதில் சிவப்பணு குறைவதனால் இரத்த சோகை ஏற்படுகிறது.

இந்தனை ஹிமோகுளோபின் கூப்டு என்றும் கூறுவார். இது மூன்று வகையானா குறைபாட்டை ஏற்படுத்தும். நாம் சுவாசிக்கும் காற்றில் உள்ள ப்ராண வாயு குவித்தாலும் ரத்த சோகை ஏற்படும்.

இரத்த சோகை இரத்தத்தில் உள்ள வைட்டமின் C மற்றும் B12 குறைபாட்டினால் ஏற்படும் இரத்த சோகை வைட்டமின் குறைபாட்டினால் ஏற்படும் குறைபாடு என கூறப்படுகிறது.

அதே போல் இரும்பு சத்து குறைபாட்டினால் ஏற்படும் இரத்த சோகை ஏற்படுகிறது.

நோய் காரணமாக ஏற்படும் இரத்த சோகை குரோனிக் அனீமியா என்று அழைக்கப்படுகிறது.

இரத்த சோகை ஏற்படுவதை சில அறிகுறிகள் வைத்து கண்டு பிடிக்கலாம்.

இரத்த சோகையின் அறிகுறிகள்:

வாந்தி

மயக்கம்
உடல் சோர்வு
தலைவலி
உடல் வெப்பம்
பசியின்மை
நெஞ்சு வலி
அதிக இதயத்துடிப்பு
வீக்கம்
மூச்சுத்திணறல்

இரத்த சோகை ஏற்பட சில கரணங்கள் உள்ளன. வைட்டமின் மற்றும் இரும்பு சத்து குறைபாட்டினால் இரத்த சோகை ஏற்படும், தனெதிர்ப்பு நோய்களால் ஏற்படும் மற்றும் இரத்தப்போக்கு, நாம் உண்ணும் மருந்து மாத்திரைகளால் ஏற்படுகிறது.

மாதவிடாயின் போது அதிக இரத்த போக்கு உள்ளவர்களுக்கு இரத்த சோகை அதிகம் ஏற்பட வாய்ப்புள்ளது. கர்பிணி பெண்கள் மற்றும் பாலூட்டும் பெண்களுக்கும் ஏற்படும்.

வைட்டமின் மற்றும் இரும்புசத்து உணவுகளை குறைவாக உண்ணுபவர்களுக்கு இரத்த சோகை ஏற்படும்.

மேலும் குறைபிரசவத்தில் பிறந்த குழந்தைகளுக்கு இரத்த சோகை எளிதில் ஏற்படும். பிரசவத்துக்கு பின்பு ரத்த சோகை உருவாகும் காரணங்களில் மூன்று நிலைகள் காரணமாக இருக்கலாம். முதல் நிலை எலும்பு மஜ்ஜையில் தொடங்குகிறது. எலும்பு மஜ்ஜைகளில் உள்ள இரும்புச்சத்து குறைய தொடங்குகிறது. இதனால் ரத்தத்தில் இரும்புச்சத்து அளவு அதிகமாக குறையத்தொடங்கும். இந்த நிலை உண்டாகும் போது ரத்த சோகை உண்டானதற்கான அறிகுறிகள் எதுவும் தென்படாது. இரண்டாவது நிலையில் ரத்த சோகை உடலுக்குள் ஆக்கிரமிப்பு செய்யும் போது இரண்டாவது நிலையில் அதன் பக்கவிளைவுகளை காண்பிக்க தொடங்குகிறது. முதலில் சோர்வை உணர்வீர்கள். இந்நிலையில் பெண்கள் பிரசவத்தால் வந்த சோர்வு என்று நினைப்பார்கள். ஆனால் இது இரும்புச்சத்து குறைபாடு அறீகுறியாகவும் இருக்கலாம். மூன்றாவது நிலையில் ஹீமோகுளோபின் அளவு மேலும் குறைய தொடங்குகிறது. இது ரத்த சோகைக்கு காரணமாகிறது அறிகுறிகள் தீவிரமாக இருக்கும். சோர்வு அதிகமாக இருக்கும். இதை தவிர்க்க ஹீமோகுளோபின் அளவு குறித்த பரிசோதனை அவசியம். எனினும் எதனால் இந்த தீவிரமான ரத்த சோகை உண்டாகிறது என்பதை கண்டறிந்தால் இதை தவிர்ப்பது எளிதாக இருக்க கூடும்.

இரத்த சோகை வராமல் தடுக்க நாம் செய்யவேண்டியது:

இரும்புச்சத்து அதிகமுள்ள பயறு வகைகள் நாம் அதிகம் உண்ணவேண்டும் , சோயா பன்னீர், பச்சை நிறக் காய்கறிகள், மாதுளைப் பழம், முருங்கைக் கீரை, பீன்ஸ், உருளைக்கிழங்கு, ஆலிவ் ஆகிய உணவுகள் சாப்பிடவும்.
வைட்டமின் சி அதிகம் உள்ள உணவுகள், தேவைப்பட்டால் மருத்துவர் பரிந்துரைக்கும் ஊட்டச்சத்து மருந்துகளை எடுத்துக்கொள்ளலாம்.
இரத்த சோகைக்கான அறிகுறிகள் தென்பட்டால் மருத்துவரை அணுகவும். மருத்துவர் பரிந்துரைக்கும் உட்டச்சத்து உணவுகளை மட்டும் எடுத்துக்கொள்ளவும்.