இன்றைய காலச்சூழலில் நம் உணவில் நாம் சரியாக கண் வைப்பது இல்லை. இதனால் பலரது உடலும் கொழுப்பை சுமக்கும் சுமையுந்தாகவே இருக்கிறது.

பொதுவாக இந்த கொழுப்புகளை இரண்டு வகையாகப் பிரிக்கலாம். ஒன்று நன்மை செய்யும் கொழுப்பு, மற்றொன்று கெடுதல் செய்யும் கொழுப்பு. இந்த கெடுதல் செய்யும் கெட்ட கொழுப்பு அதாவது கொலஸ்டிரால் தான் மாரடைப்புக்கு வழி வகுக்கிறது. இதற்கு அலோபதி மருத்துவத்தை விடவும் சாதாரண எள்ளு விதைகள் மிகவும் துணை செய்கிறது.


இதற்கு ஒரு தேக்கரண்டி எள் விதையும், ஒரு தேக்கரண்டி தேனும் போதும். இவை இரண்டையும் முதலில் ஒரு கின்னத்தில் சம அளவுக்கு எடுத்துக்கொள்ள வேண்டும். இப்போது இது இரண்டையும் நல்லா கலக்க வேண்டும். கலக்கினால் பசை போன்று ஒன்று கிடைக்கும்.

இது ரொம்பவே ஆரோக்கியமான உணவு. இதை தினமும் காலை, இரவு படுக்கைக்கு முன்னர் வழக்கம் போல் நாம் சாப்பிட்டதன் பின்பு எடுத்துக்கணும். தேன், எள் விதை கலவை என்ன செய்யும் தெரியுமா?


இதை நாம் சாப்பிட்டதும் ரத்த குழாய்களின் உள்ளே சென்று அங்கு படிந்துள்ள அதிக கொழுப்பை கரைத்துவிடும். இதில் உள்ள ஆண்டி ஆக்ஸிடெண்ட்கள் மூளையில் செல்களின் வளர்ச்சியையும் ஊக்குவிக்கும். இதனால் மன அழுத்தமும் குறையும். ஆக, பொழுப்பையும் குறைத்து, மனதையும் ரிலாக்ஸ்டாக்கும் இதை நீங்கள் முயற்சித்து பாருங்களேன்.