உங்கள் கூந்தல் பெண்களின் அழகே கூந்தல் தான். அதனால் தான் அழகான, நீளமான கூந்தல் கொண்ட பெண் அனைவருக்கும் பிடித்தவர் ஆகிறார். தலையில் கூந்தல் நிரம்ப பெண்கள் பூ சூடிக் கொள்வது அவர்களுக்கு கூடுதல் அழகைக் கொடுக்கும். இங்கே அழகு என்பதை விட கூந்தல், அதில் சூடி இருக்கும் பூ ஆகியவை லெட்சுமி கடாட்சம், ஐஸ்வர்யம் என்றெல்லாம் கிராமப்பகுதிகளில் சிலாகிப்பதை கேட்டு இருக்கிறோம்.


இந்த கூந்தல் நீளமாக வளர வேண்டும் என்பது தான் பல பெண்களின் விருப்பமும். ஆனால் சிலருக்கு கிடைக்கும் அந்த வரம், பலருக்கும் வாய்ப்பதில்லை. ஆனால் அவர்கள் இதை மட்டும் கடைபிடித்தாலே போதும் கூந்தல் நீளமாக வளர்ந்துவிடும். அது என்ன? அதுகுறித்து தெரிந்துகொள்ள மேலே படியுங்கள்.

பொதுவாகவே நாம் சரும பளபளப்புக்கு தான் கடலைமாவை பயன்படுத்துகிறோம். ஆனால் கடலைமாவோடு, தயிர் சேர்த்து பயன்படுத்தும் போது கூந்தல் வளர்ச்சியைத் தூண்டும். இதை எப்படி பயன்படுத்த வேண்டும் என இனி பார்க்கலாம். கொஞ்சம் கடலைமாவு மற்றும் தயிர் சேர்த்து நன்றாக கலக்கவேண்டும்.


அதனோடு கொஞ்சம் மஞ்சள் தூளையும் சேர்த்துக்கொள்ள வேண்டும். இந்த கலவையை உங்கள் கூந்தலில் அப்ளே செய்து 30 நிமிடங்கள் விடவும், தொடர்ந்து இளஞ்சூடான நீரில் கழுவினால் உங்கள் கூந்தல் செம அடர்த்தியாக வளரும்.