உதவி இயக்குனரை இரண்டாவது திருமணம் செய்த பிரபல தமிழ் நடிகை.!

உதவி இயக்குனரை இரண்டாவது திருமணம் செய்த பிரபல தமிழ் நடிகை.!

தமிழ் மற்றும் மலையாளத் திரைப்படங்களில் நடித்த நடிகை ஒருவர் உதவி இயக்குனரை திருமணம் செய்து கொண்டதாக அறிவித்துள்ளதோடு, திருமண புகைப்படங்களையும் வெளியிட்டுள்ளார். தமிழில் வெளியான நெல்லு, கோட்டி, உன்னையே காதலிப்பேன், இதுவும் கடந்து போகும், நீ நான் நிழல் ஆகிய படங்களிலும் புலிமுருகன், த்ரிஷ்யம் 2 உள்பட பல மலையாள படங்களிலும் நடித்தவர் நடிகை அஞ்சலி நாயர். இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் அனீஷ் உபாசனா என்பவரை திருமணம் செய்து கொண்டார் என்பதும் ஆவ்னி என்ற பெண்குழந்தை இந்த தம்பதிக்கு உண்டு என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக கணவரை விவாகரத்து செய்த அஞ்சலி நாயர் கடந்த சில ஆண்டுகளாக அஜித் ராஜூ என்ற உதவி இயக்குனரை காதலித்து வருவதாக கூறப்பட்டது. இந்த நிலையில் அஜித் ராஜுவை சமீபத்தில் அஞ்சலி நாயர் இரண்டாவது திருமணம் செய்துகொண்டார். இதனை இருவருமே தங்கள் சமூக வலைத்தளத்தில் பகிர்ந்து உள்ள நிலையில் ரசிகர்கள் இந்த தம்பதிக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.