பொதுவாக ஊதா நிறத்தில் இருக்கக்கூடிய உணவிற்கு தனிவித தன்மைகள் இருக்கிறது. குறிப்பாக இந்த வகை காய்கறிகள், பழங்கள் கொலஸ்ட்ரால், செரிமானக் கோளாறு, சர்க்கரைநோய் போன்ற பலவற்றிற்கும் தீர்வு தருகிறது என்கின்றனர் உணவியல் வல்லுனர்கள்.


ஊதா நிறத்தில் இருக்கும் கத்திரியின் மருத்துவ பலன்கள் ஏராளம். வைட்டமின் கே, சி. பி6, நார்சத்து, கால்சியம், பொட்டாசியம், மெக்னீசியம் போன்ற சத்துக்கள் அதிகளவில் உள்ளன. அத்துடன் நம் உடலில் இருக்கும் கொலஸ்டிராலை குறைக்கக்கூடிய தன்மையும் கத்திரிக்கு உண்டு.


இதேபோல் நாவல் பழத்துக்கு சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும் தன்மை உண்டு. தினமும் நாவல் பழம் சாப்பிட்டால் ரத்தம் சுத்தமாகும். வெங்காயத்துக்கும் மருத்துவ பலன்கள் ஏராளம். இதில் பொட்டாசியம் அதிக அதிகம் இருப்பதால் இதயம் சார்ந்த நோய்களைத் தடுக்கும். கெட்ட கொலஸ்டிராலைக் குறைக்கும். இதேபோல் திராட்சை பழம் செரிமானக் கோளாறைத் தீர்க்கும்.

அப்போ இனி ஊதா நிற காய்கறிகள், பழங்கள் கிடைத்தால் சாப்பிட மிஸ் பண்ணிடாதீங்க…