நீங்கள் ஆரோக்கியமான வாழ்க்கையை முறையைப் பின்பற்ற விரும்பினார் தினமும் எலுமிச்சை ஜூஸ் உடன் சிறிது மஞ்சள் தூளையும் சேர்த்து கலந்து குடியுங்கள்.பொதுவாக எலுமிச்சை ஜூஸ் பல்வேறு நன்மைகளை உடலுக்கு வாரி வழங்கும்.அத்துடன் மஞ்சள் தூளை சேர்த்து கலந்து குடிக்கும் போது நன்மைகள் இரட்டிப்பாகும்.


குறிப்பாக நீங்கள் நாள் முழுவதும் சுறுசுறுப்பாக செயல்பட நினைத்தாலோ, உடலில் உள்ள கழிவுகளை அன்றாடம் வெளியேற்றி உடலை சுத்தமாக வைத்துக் கொள்ள நினைத்தாலோ எலுமிச்சை ஜூஸில் மஞ்சள் தூள் கலந்து குடியுங்கள்.

நன்மைகள்

பொதுவாக மஞ்சள் தூளை நீரிலோ அல்லது எலுமிச்சை ஜூஸிலோ கலந்து குடித்தால், உடலில் கொழுப்புக்கள் தேங்குவது தடுக்கப்படுவதாக ஆய்வுகள் கூறுகின்றன.கவே தினமும் காலையில் இந்த பானத்தைக் குடித்து ஒரு நாளை தொடங்கினால், உடல் பருமனாவது தடுக்கப்படுவதோடு, உடல் எடையும் குறையும்.


மஞ்சள் தூள் கலந்த எலுமிச்சை ஜூஸைக் குடித்தால், பித்த நீரை உற்பத்தி செய்யும் திறன் மேம்படும்.
ஒருவரது செரிமான மண்டலத்தின் ஆரோக்கியமான செயல்பாட்டிற்கு பித்த நீர் மிகவும் இன்றியமையாதது. மேலும் இது உடலின் மெட்டபாலிசத்தையும் மேம்படுத்தும்.

உடலில் இருந்து நச்சுக்களை நீக்குவதற்கு கல்லீரல் பித்த நீரைப் பயன்படுத்துகிறது. மேலும் பித்த நீர் கல்லீரலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவுகிறது.இதற்கிடையில் எலுமிச்சையில் உள்ள சிட்ரிக் அமிலம், உடல் ஆரோக்கியத்திற்கான pH அளவைப் சரியாக பராமரிக்க உதவுகிறது.

அதோடு எலுமிச்சை ஒரு இயற்கையான நீர்ப்பெருக்கி பொருள். ஆகவே இது உடலில் உள்ள நச்சுக்களை சிறுநீரில் வழியே வெளியேற்றும்.பல்வேறு ஆய்வுகளில், மஞ்சளில் உள்ள உட்பொருட்கள் கொலஸ்ட்ரால் அளவில் நல்ல தாக்கத்தை ஏற்படுத்துவதாக கூறுகின்றன.

ஆனால் எந்த அளவில் எடுப்பது என்பது சரியாக தெரியவில்லை. இருப்பினும், கொலஸ்ட்ரால் பிரச்சனை வராமல் இருக்க வேண்டுமானால் அல்லது கொலஸ்ட்ரால் பிரச்சனையை போக்க நினைத்தால், தினமும் காலையில் எலுமிச்சை ஜூஸில் மஞ்சள் தூள் கலந்து குடியுங்கள்.