முகத்தை வெண்மையாக்குவது என்பது உங்கள் சருமத்தை ஒளிரச் செய்வது என்று அர்த்தமல்ல, மாறாக, இது உங்கள் சருமத்தின் நிறத்தை பிரகாசமாக்குவது, கறைகள் மற்றும் கரும் புள்ளிகளை மறைத்தல், பழுப்பு நிறத்தை நீக்குதல் மற்றும் தெளிவான, ஒளிரும் சருமத்தைப் பெறுதல்.


பழுப்பு நிற கோடுகள் மற்றும் கருமையான புள்ளிகள் பெரும்பாலும் உங்கள் சருமத்தை மந்தமாகவும், உங்கள் முகத்திற்கு தோற்றத்தை கொடுக்கவும் செய்கின்றன. இளைய தோற்றமுடைய, அழகான சருமத்தைப் பெற, தெளிவான மற்றும் களங்கமற்ற நிறத்திற்கு வழிவகுக்க வேண்டுமா ?

ஒரே இரவில் முகம் வெள்ளையாக டிப்ஸ் இருக்கு…. சிலருக்கு சருமம் எப்போதும் பொலிவிழந்து, பார்ப்பதற்கு கருப்பாக இருக்கும். அதற்காக நீங்கள் கவலை பட வேண்டாம். சிலர் இதற்காக, பலவகையான செயற்கை கிரீம் வாங்கி பயன்படுத்தியும், ஒரே இரவில் முகத்தை வெளுப்பாக்குமா என்றால் கேள்வி குறிதான். இருந்தாலும், ஒரே இரவில் சருமத்தை வெள்ளையாக மாற இயற்கை அழகு குறிப்புகள் உள்ளன.

தக்காளி பழத்தை பாதியாக நறுக்கி எடுத்து கொள்ளவும்.
நறுக்கி எடுத்து கொண்ட தக்காளி பழத்தை கஸ்தூரி மஞ்சள் தூளில் விட்டு எடுத்து கொள்ளவும்.இந்த தக்காளி பழத்தை சிறிது நேரம் வரை சருமத்தில் மசாஜ் செய்ய வேண்டும்.இதனை சுமார் 10 அல்லது 15 நிமிடங்கள் வரை அப்படியே வைக்க வேண்டும்.பின்னர் வெது வெதுப்பான நீரால் சருமத்தை கழுவ வேண்டும்.

இந்த முறையை தினமும் இரவு தூங்குவதற்கு முன் செய்து வர நல்ல பலன் கிடைக்கும்.இவ்வாறு செய்வதினால், சருமத்தில் உள்ள கருமை நிறம் மறைந்து, சருமத்தை வெள்ளையாக மாற்ற தாக்காளி பெரிதும் உதவுகிறது. தக்காளியில் அதிகளவு ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளதால், சருமத்தை வெள்ளையாக மாற்ற இது உதவுகிறது. மேலும் பல்வேறு வகையான ஆரோக்கிய பிரச்சனைகளை சரி செய்ய தக்காளி உகந்த தீர்வாக அமைகிறது. தக்காளி சருமத்தை ஒரே இரவில் வெளுக்க செய்து மாற்றத்தை கொடுக்கும்.