“கண்ணு கூசுதே.. – என்ன பளபளப்பு.. – செம்ம ஹாட்..” – ட்ரெண்ட் ஆகும் சாய்பல்லவியின் கவர்ச்சி போட்டோஸ்..!

“கண்ணு கூசுதே.. – என்ன பளபளப்பு.. – செம்ம ஹாட்..” – ட்ரெண்ட் ஆகும் சாய்பல்லவியின் கவர்ச்சி போட்டோஸ்..!

தெலுங்கு திரையுலகில் செம்ம பிஸியான நடிகையாக வலம் வரும் சாய் பல்லவி தற்போது, மெல்லிய சேலையில் வெளியிட்டுள்ள புகைப்படம் செம்ம வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது. மலையாளத்தில் கடந்த 2015ம் ஆண்டு வெளியான பிரேமம் படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமான சாய் பல்லவி, மலர் டீச்சர் என்ற பெயரில் ரசிகர்கள் மத்தியில் பிரபலம் ஆனார். இதைதொடர்ந்து, சாய் பல்லவி தற்போது 3 படங்களில் பிசியாக நடித்து வருகிறார்.கடந்த சில நாட்களுக்கு முன் வெற்றி மாறன் இயக்ககத்தில், ரிலீசான ஆந்தாலஜி படமான ’பாவக்கதைகள்’ படத்தில் சாய்பல்லவி நடித்தார். அதில் நடித்த சுமதி கதாபாத்திரம், அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்தது. சாய் பல்லவி நடித்து வரும் தெலுங்கு படமான ‘லவ் ஸ்டோரி’ படத்தில் இருந்து இன்று வெளியான ‘சாரங்க டரியா’ பாடல் ரவுடி பேபி பாடலை தொடர்ந்து சூப்பர் ஹிட் ஆகியுள்ளது.

அவரது நடனத்தில் தற்போது “லவ் ஸ்டோரி’யின் “சரங்கதரியா….’ பாடலின் லிரிக் விடியோ வெளியாகி வைரலாகி வருகிறது. லிரிக் விடியோவின் இடை இடையே சாய் பல்லவியின் நடனமும் க்யூட் ரியாக்ஷனும் ரசிகர்களைக் கவர்ந்திழுக்கிறது. ஆழமான நடிப்பு மற்றும் அமர்க்களமான நடனத்துக்கு சொந்தக்காரியான இந்த மலர் டீச்சரை எப்போதுமே ரசிகர்கள் மறக்க மாட்டார்கள். சாய் பல்லவி குறித்த எந்தவொரு செய்தி வெளியானாலும் அவரது ரசிகர்கள் ஆஜராகி டிரெண்ட் செய்யாமல் விடமாட்டார்கள். தற்போதும், சாய் பல்லவி என்ற ஹாஷ்டேக் டிரெண்டாகி வருகிறது.இதனை தொடர்ந்து, ஓவர் மேக்அப் இல்லாமல்… எளிமையான அழகால் ரசிகர்களை கவர்ந்து வரும் சாய் பல்லவி தற்போது வெளியிட்டுள்ள புகைப்படத்துக்கு லைக்குகள் குவிந்து வருகிறது.