காமெடி நடிகரின் மகன் இன்று தூத்துக்குடி கலெக்டர் !! இவருடைய மகனா இது ?? நெகிழ்ந்துபோன பிரபலம் !

காமெடி நடிகரின் மகன் இன்று தூத்துக்குடி கலெக்டர் !! இவருடைய மகனா இது ?? நெகிழ்ந்துபோன பிரபலம் !

தமிழ் சினிமாவில், 1980 மற்றும் 1990 காலகட்டங்களில் பல படங்களில் வித்தியாசமான கதாபாத்திரங்களாக தேர்வு செய்து நடித்தவர் சின்னி ஜெயந்த். இவர், நகைச்சுவை, குணச்சித்திரம், வில்லத்தனம் என, ஏற்று நடிக்கும் கதாபாத்திரங்களில் தனது திறமையை வெளிப்படுத்தி உள்ளார். நடிப்பை தாண்டி மிமிக்ரி செய்வதன் மூலம் அதிகம் பிரபலமானார்.நிறைய தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நடுவராக இருந்துள்ளார். தற்போது, விஜய் சேதுபதின் ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ படத்தில் நடித்துள்ளார். இதையடுத்து, சின்னி ஜெயந்தின் மகன் ஸ்ருபதன் ஜெய், யு.பி.எஸ்.சி தேர்வில் கடந்த ஆண்டு அகிய இந்திய அளவில் 75வது இடத்தை பிடித்தார். அப்போது இச்சம்பவம் திரையுலகினர் பலரையும் மட்டற்ற மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், சிவக்குமார் உள்ளிட்ட பலரும் சின்னி ஜெயந்திற்கும், அவருடைய மகனுக்கும் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்தனர். தன்னுடைய மகன்களுக்கு படிப்பின் மீதே அதீத ஆர்வம் என்றும், நடிப்பில் ஆர்வம் இருந்திருந்தால் கட்டாயம் திரைத்துறைக்குள் வந்திருப்பார்கள் என்றும் சின்னி ஜெயந்தி கூறியிருந்ததற்கான அர்த்தம் அன்று எல்லோருக்கும் புரிந்தது.

இந்நிலையில், தற்போது அவர் தூத்துக்குடி மாவட்ட சப்-கலெக்டராக நியமிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து ஸ்ருதனுக்கும், அவரது தந்தை சின்னி ஜெயந்துக்கும் வாழ்த்துகள் குவிந்து வருகின்றன. முன்னதாக, தான் பணியில் பொறுப்பேற்றதும் கல்வி, வணிகம், மற்றும் பெண்கள் முன்னேற்றம் ஆகியவற்றில் கவனம் செலுத்த விரும்புவதாக குறிப்பிட்டிருந்தார் ஸ்ருதன்.

By admin