நம்மில் பலர் அடிக்காடி காபி, டீ போன்றவற்றை ஒருநாளைக்கு பலமுறைகள் எடுத்து கொள்வதுண்டு.இது அந்த அளவுக்கு உடலுக்கு நல்லதல்ல. இதனால் பல உடல்நல கோளாறுகள் ஏற்படுவதுண்டு.


அதனை தவிர்த்து விட்டு இயற்கையாக தயாரிக்கப்படும் சில மூலிகைகள் கொண்டு தயாரிக்கப்படும் பானங்கள் உடலுக்கு பல வகையில் நன்மையை அள்ளித்தருகின்றது.சில மூலிகை பானங்களை எடுத்து கொள்ளவதனால் உடல் ஆரோக்கியத்தை காக்க முடியும்.அந்தவகையில் தற்போது அந்த மூலிகை பானங்கள் என்னென்ன என்பதை பார்ப்போம்.

பேரிச்சை விதை தேநீர்
பேரிச்சை விதையை நன்கு வறுத்து பொடி செய்து கொள்ள வேண்டும். அதனை ஒரு டம்ளர் நீரில் ஒரு தேக்கரண்டி என்ற அளவில் சேர்த்து கொண்டு கொதிக்க விட்டு பின்பு வடி கட்டி, பால், பனங்கற்கண்டு சேர்த்து வாரம் ஒரு முறை குடிக்கலாம்.


பேரிச்சை விதை தேநீரில் தாமிரம், செலினியம், இரும்பு சத்து உள்ளிட்ட தாது உப்புகள் நிறைந்துள்ளதால் ரத்த சோகை, தோல் பிரச்னைகள், நியாபக மறதி ஆகியவை சரியாகும்.

ஆரஞ்சு தோல் தேநீர்
ஆரஞ்சு தோலின் வெள்ளை பகுதியை நீக்கி விட்டு பொடியாக நறுக்கி இரண்டு குவளை நீரில் போட்டு கொதிக்க வைக்க வேண்டும். அதனுடன் தட்டிய ஏலக்காய் சேர்க்க வேண்டும். பாதியாக சுண்டிய பிறகு எடுத்து வடிகட்டி தேன் சேர்த்து குடிக்கலாம்.

தில் வைட்டமின் “சி”, ஆன்டி ஆக்ஸிடன்ட், பிளவனோய்ட்ஸ், ஆகியவை நிறைந்திருப்பதனால் தோல் பி ரச்னை நீ ங்கி தோ ல் பொ லிவு பெரும்.