சிவகார்த்திகேயன் பிறந்தநாளான இன்று பிரபல நடிகர் கொடுத்த சர்ப்ரைஸ் !
ஆரம்ப காலகட்டத்தில் தொலைக்காட்சி தொகுப்பாளராக இருந்து, எந்த திரைப்பின்னணியும் இல்லாமல் தனது திறமையால் கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறி தற்போது முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் சிவகார்த்திகேயன். இவரது படங்கள் என்றாலே ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பு இருக்கும்.
மேலும் பல முன்னணி நடிகர்களுக்கும் இணையாக இவரும் பெரும் ரசிகர் பட்டாளத்தை வைத்துள்ளார். அதேபோல் பலரும் இவரது படங்களை குடும்பத்துடன் சென்று திரையரங்குகளில் பார்ப்பது வழக்கம். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான டாக்டர் திரைப்படம் ரசிகர்களிடையே பெரியளவில் வரவேற்பை பெற்றதுடன் 100 கோடி வசூல் சாதனையும் படைத்துள்ளது. வருத்தப்படாத வாலிபர் சங்கம் திரைப்படத்தில் சிவகார்த்திகேயனுடன் இணைத்து நடித்த நடிகர் சூரி, இவர் அதன் பின்னர் பல படங்களில் நடித்து அனைவரையும் மகிழ்வித்துள்ளார். வருத்தப்படாத வாலிபர் சங்கம் மிகப்பெரிய வெற்றி பெற்று சிவகார்த்திகேயன் திரையுலக வாழ்வை மேலும் ஒரு படி மேல் ஏற்றி கொடுத்தது. இந்நிலையில் அவரது நண்பரும் நகைச்சுவை நடிகருமான சூரி அவருக்கு கொடுத்த சர்ப்ரைஸ் இதோ