நம்ம ஊரு மக்களுக்கு இஞ்சி என்றாலே அலர்ஜி. அதனால் தான் எப்போதும் உர்ரென்று முகத்தை வைத்திருப்பவர்களைக் கூட இஞ்சி தின்னக் குரங்கு என கலாய்ப்போம். ஆனால் இஞ்சியில் தான் பலவிதமான நன்மைகள் இருக்கிறது. அதிலும் சீனர்களின் ஆரோக்கிய ரகசியமே இதுதான்!


பொதுவாக சீனர்கள் நீண்ட ஆயுள், புத்திகூர்மைக்கு பெயர் பெற்றவர்கள். தினமும் காலையில் ஒரு சின்ன துண்டு இஞ்சியை வெறுமனே சாப்பிடும் வழக்கம் சீனர்களுக்கு உண்டு. தினம் ஒரு துண்டு இஞ்சியை சாப்பிட்டாலே தாம்பத்ய பிரச்னை தொடங்கி, புற்றுநோய் வரை பல நோய்களுக்கு அருமருந்தாகிவிடும்.

நம்மூரில் வெண்டைக்காய் சாப்பிட்டால் நல்லா கணக்கு வரும் என்பார்கள். அது உண்மையா? பொய்யா தெரியாது. ஆனால் தினமும் ஒரு துண்டு இஞ்சியை உணவில் சேர்த்துக் கொண்டால் அது மூளையின் நரம்புகளை ஆரோக்கியமாக்கி, சுறுசுறுப்பாக வேலை செய்ய வைக்கும். வயது ஏறினாலும், ஞாபகத்திறனை இறங்காமல் பார்த்துக் கொள்ளும்.

இதேபோல் தினமும் ஒரு துண்டு இஞ்சியை சாப்பிட்டால் புற்றுநோய் செல்களின் வளர்ச்சியை இது முற்றாகத் தடுத்துவிடும். இதேபோல் உடல் ரத்த ஓட்டத்தை சீராக்கும். ஆண்களின் உறுப்புக்கும் ரத்த ஓட்டத்தை தொய்வின்றி சீராகக் கடத்தி தாம்பத்ய வாழ்க்கைக்கும் கைகொடுக்கும். தினம் ஒரு துண்டு இஞ்சி சாப்பிட்டால் பெண்கள் மாதவிடாய் கால வலியை விரட்டலாம். வயிறு உப்பிப் போய் இருப்பது, உடலில் இருக்கும் கெட்ட கொழுப்பு ஆகியவற்றையும் இஞ்சி விரட்டி ஓட வைக்கும். ரத்த சர்க்கரையின் அளவை குறைப்பது, இதயநோய் ஆபத்தில் இருந்து காப்பது ஆகியவற்றிலும் இஞ்சிக்கு இணை எதுவுமே இல்லை.

மூட்டுவலி, வாயுத்தொல்லை நீக்கம் ஆகியவற்றிற்கு இஞ்சி நல்ல பலனைக் கொடுக்கிறது. அஜீரணக் கோளாறு இருப்பவர்கள் வெறும் வயிற்றிலேயே இந்த இஞ்சியை சாப்பிடலாம். உடல் எடை குறைப்பிலும் இஞ்சி முக்கிய பங்கு வகிக்கிறது. 43 கலோரிகளை நமது உடலில் இருந்து கரைக்கும் தன்மையோடு செயல்பட்டு நம்மையும் ஜம்மென்று, யூத்புல்லாக மாற்றும்.

இப்போ புரியுதா இஞ்சி இடுப்பழகின்னு ஏன் பாட்டு வந்துச்சுன்னும், சீனர்கள் ஏன் ஆரோக்கியமாக இருக்குறாங்கன்னும்? அப்புறமென்ன தினமும் ஒரு துண்டு இஞ்சி எடுங்க..மெல்ல கடிங்க..சாப்பிடுங்க…ஆரோக்கியமா இருங்க!…