உலகையே ஆட்டிப்படைத்த கொண்டிருக்கும் கொரோன வைரஸ்க்கு எந்தவொரு மருந்தும் இதுவரை கண்டுபிடிக்கப்படதா நிலையில் தடுப்பூசி கண்டுபிடிக்கும் முயற்சியில் சர்வதேச அளவில் மருத்துவ விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளனர்.இந்நிலையில் மருத்துவ நிபுணர்கள் கொரோனா வைரசுக்கு எதிராக போரிடுவதில் நோய் எதிர்ப்புசக்தியை பெருக்கிக்கொள்ளவேண்டும் என்று பரிந்துரைத்து உள்ளனர்.


இதற்கு ஆயுர்வேதத்தில் சில மூலிகைகள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து கொரோனா வைரஸிற்கு எதிராக செயற்படுகின்றது என்று கூறியுள்ளனர்.

இந்நிலையில் இந்தியாவின் பழமையான தமிழ் மருத்துவ முறை நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதாகக் கூறப்படுகிறது. துளசி, லவங்கப்பட்டை, கறுப்பு மிளகு, சுக்கு, உலர் திராட்சை ஆகிய ஆயுர்வேத மூலிகைப் பொருட்களை தொடர்ந்து உட்கொள்வதும், வழக்கமான யோகா பயிற்சியில் ஈடுபடுவதும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் என இயற்கை மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் அன்றாட உணவில் மஞ்சள், சீரகம், கொத்தமல்லி, பூண்டு ஆகியவற்றை சேர்க்கவேண்டும் என்றும் அவர்கள் அறிவுறுத்துகின்றனர்.


சரி நண்பர்களே நம் வீட்டில் இருக்கும் பொருட்களை கொண்டு நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கா அருமையான டீ செய்து குடித்தால் நன்மை பல

தேவையான பொருட்கள்:

நாட்டு கொத்தமல்லி , சுக்கு , மிளகு , நாட்டு சர்க்கரை

செய்முறை:

ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றி கொத்தமல்லியை மிக்ஸியில் போட்டு அரைத்து தூளாக்கி தண்ணீரில் கலந்து மற்ற பொருட்களை போட்டு தேவையான அளவு சர்க்கரை சேர்த்து நன்றாக கொதிக்க வைத்து வடிகட்டி கொள்ளுங்கள்

சாப்பிடும் முறை:
காலை மற்றும் மாலை ஒரு டம்ளர் குடிக்க வேண்டும்