சிலருக்கு உடலில் ஏதேனும் பகுதியில் கொழுப்பு கட்டிகள் தோன்றும், இதனை லிபோமா என்று அழைப்பார்கள், கொழுப்பு திசுக்கள் உடலின் உட்பகுதியில் வளர்ச்சி பெரும் நிலைதான் இது. இந்த லிபோமாக்கள் புற்று நோய் கட்டிகள் அல்ல மற்றும் இது புற்றுநோய் கட்டிகளாகவும் மாறாது. இந்த கொழுப்பு கட்டிகள் கழுத்து, அக்குள், தொடை, மேற்புற கைகள் போன்ற இடங்களில் தோன்றும்.

சிலருக்கு இந்த கட்டிகள் எந்த இடத்தில் வேண்டுமானாலும் தோன்றும். இருப்பினும் இந்த கொழுப்பு கட்டிகள் வளர்ச்சி பெறுவதற்கான காரணங்கள் இன்று வரை கண்டுபிடிக்கப்படவில்லை.மரபணுக்கள், உடல் பருமன் அல்லது அதிகப்படியான கொலஸ்ட்ரால் போன்றவற்றால் வர வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது. முக்கியமாக இந்த கட்டிகள் எவ்வித வலியையும் தராது. அப்படியே வளர்ந்தாலும் மிகவும் மெதுவாகவே வளர்ச்சி பெறும்.


இந்த கட்டிகளைப் போக்க அறுவை அல்லது லேசர் சிகிச்சைகளைத் தான் மருத்துவர்கள் பரிந்துரைப்பார்கள். இருப்பினும் இந்த சிகிச்சைகளால் மீண்டும் லிபோமா வராது என்ற உறுதியும் இல்லை. ஆனால் இந்த கொழுப்பு கட்டி கரைய இயற்கை வழிமுறைகள் உள்ளது. அவற்றை பற்றி அறிந்து கொள்ளலாம்.

இதற்கு இயற்கையான இலகு மருத்துவம் என்பது துத்தி இலை தான். சாதாரணமாக எல்லா இடங்களிலும் இந்த துத்தி இலைகள் கிடைக்க கூடியது தான்.இதனை எப்படி செய்துகொள்வது என பார்க்கலாம். முதலில் துத்தி இலைகளை பறித்து நன்றாக கழுவிக் கொள்ளுங்கள். பின் நன்றாக அரைத்துக் கொள்ளுங்கள். பின் சிறிய பாத்திரம் ஒன்றில் நல்லெண்ணை விட்டு அதனுடன் அரைத்து வைத்த துத்தி இலை பேஸ்ட் சேர்த்து அடுப்பில் வையுங்கள்.


இவன் நன்றாக சூடானதும்..இறங்கி பொறுக்க கூடிய சூட்டில் கட்டி உள்ள இடத்தில் இந்த பேஸ்டை அப்ளை செய்யுங்கள். அவ்வளவு தான். கொழுப்பு கட்டி கரைந்துவிடும். இது உடலில் எந்த இடத்தில் இந்த கட்டி இருந்தாலும் கரைத்து விடும். குறிப்பு: இது ஆபத்தான வேறு நோய்களுக்கான கட்டிகளுக்கானவை இல்லை. இது முற்றிலும் கரைந்து போகும் கொழுப்பு கட்டிக்கானது என்பதை மனதில் வைத்துக் கொள்ளவும்..!!