கால்சியம் சத்து நிறைந்த பால் மற்றும் ந ச்சு நீ க்கியாக இருக்கும் மஞ்சள் இரண்டையும் கலந்து குடிப்பதால் பல வகையான நன்மைகள் உள்ளன.


குறிப்பாக நோய் எதிர்ப்புச் சக்தி அதிகம்கொண்டது மஞ்சள். இருமல், சளி போன்ற நேரத்தில் மஞ்சள் கலந்த பால் குடிப்பது மிகவும் நல்லது.உடல் ஏதேனும் தொற்றுகளால் பாதிக்கப்பட்டிருந்தலும் மஞ்சள் பால் குடிக்கும்போது அதை எதிர்த்துப் போராடும் ஆற்றலை உடல் பெறுகிறது.

எனவே Golden Milk என அழைக்கப்படும் மஞ்சள் பாலை எப்படி தயாரிப்பது என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள் :
பால் – 120 ml
மஞ்சள் – 1 tbsp
இஞ்சி – சிறிதளவு

மிளகுத் தூள் – 1 சிட்டிகை
பட்டை பொடி – ஒரு சிட்டிகை
தேன் – 1 tsp
செய்முறை :
பாலை கிண்ணத்தில் ஊற்றி கொதிக்க விடுங்கள்.
கொதித்து வந்ததும் இஞ்சி, மஞ்சள் , மிளகு , பட்டை பொடி சேர்த்து நன்கு கொதிக்க வையுங்கள்.
மஞ்சள் வாசனை இல்லாமல் நன்கு கொதித்ததும் வடிகட்டி தேன் கலந்து குடிக்கவும். மஞ்சள் கலந்த கோல்டன் மில்க் தயார்.