பொதுவாக ஒரு ஆரோக்கியமான உணவுப் பழக்கம் மட்டுமே ஒரு ஆரோக்கியமான வாழ்க்கை முறையை தர முடியும்.

அந்தவகையில் பார்க்கும் போது புரோபயாடிக் உணவுகள் நம் குடல் ஆரோக்கியத்திற்கு சிறந்த பங்கை வழங்குகிறது. இவை நம் நோயெதிரிப்பு சக்தியை அதிகரிக்கவும், எடை இழப்பை சாத்தியமாக்கவும் உதவி செய்கிறது


புரோபயாடிக்குகள் என்பது நேரடி நுண்ணுயிர்களாகும். இந்த நுண்ணுயிர்கள் புளித்த உணவுகளில் கிடைக்கிறது. இது பழைய சாதத்தில் அதிகமாக கிடைக்கின்றது.

குறிப்பாக புரோபயாடிக் உணவுகளை அதிகமாக சேர்த்துக் கொள்ளும் போது நம் குடல் இயக்கம் நன்றாக இருக்கும். இதன் மூலம் நம்முடைய நோயெதிரிப்பு சக்தியையும் அதிகரிக்க முடியும்.


தற்போது பழைய சாதத்தினை எப்படி எடுத்து கொள்ள வேண்டும் என்று பார்ப்புாம்.

தேவையான பொருட்கள்
ஒரு மண் பானை
சமைத்த சாதம்
கொஞ்சம் தண்ணீர்
பயன்படுத்தும் முறை
1-3 டேபிள் ஸ்பூன் சமைத்த சாதத்தை எடுத்துக் கொள்ளுங்கள். அதை ஒரு மண் பானையில் வைத்து கொஞ்சம் தண்ணீர் ஊற்றி இரவு 8-10 மணி நேரம் ஊற வைத்து விடுங்கள்.
அடுத்த நாள் காலையில் வெறும் வயிற்றில் இந்த பழைய சாதத்தை சாப்பிட்டு வாருங்கள்.