பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறும் கமல் !! இனி தொகுத்துவழங்கபோவது இந்த நடிகர்தான் !

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறும் கமல் !! இனி தொகுத்துவழங்கபோவது இந்த நடிகர்தான் !

பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியானது டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் 24 மணி நேரமும் ஒளிபரப்பாகி கொண்டிருக்கிறது. டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் 24 மணி நேரமும் ஒளிபரப்பாகும். 60 நாட்கள் நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் வனிதா, சினேகன், தாடி பாலாஜி, ஜூலி, நிரூப் உள்ளிட்ட பிரபலங்கள் கலந்து கொண்டுள்ளனர்.இந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன் கமல்ஹாசன் படப்பிடிப்பாலும், அரசியல் மற்றும் உடல் நலத்தாலும், பிக்பாஸ் அல்டிமேட்டில் இருந்து விலகுவதாகவும், பிக்பாஸ் சீசன் 6 -ல் பங்கேற்பேன் எனவும் நீண்ட அறிக்கையை வெளியிட்டு இருந்தார். இதனால், அடுத்த தொகுப்பாளர் யார் என ரசிகர்கள் கேள்வி எழுப்ப ரம்யா கிருஷ்ணன் இரண்டு முறை வந்ததால், அவர் தான் என கூறி வந்தனர்.

ஆனால், எப்பொழுதும் சிம்பு தான் என பேச்சுக்கள் எழுந்து வரும் நிலையில், தற்போது ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் விதமாக சிம்புவே தொகுப்பாளராக வருவார் என லீக்கான தகவலின் படி கூறப்படுகிறது. இது சம்பந்தமான ப்ரோமோவும் நாளை வெளியாகும் என ட்விட்டரில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.