மலர்கள் என்றாலே அவற்றிற்கு அதிக மணம் இருக்கும் என்பது இயல்பான ஒன்றே. ஆனால், அவற்றில் உள்ள மருத்துவ குணத்தை நாம் அறியாமலே இத்தனை காலம் கடந்து வந்து விட்டோம். ஒவ்வொரு பூக்களுக்குள்ளும் பல வித ஆரோக்கிய ரகசியங்கள் ஒளிந்து கொண்டுதான் இருக்கிறது. பூக்களை ரசிப்பதற்கும், சூடுவதற்கும், அழகுக்காக வீட்டில் பயன்படுத்துவதற்கும் பெரும்பாலும் நாம் இவற்றை உபயோகிக்கின்றோம்.இவற்றின் மருத்துவ தன்மையை நாம் உணர்ந்தால் கட்டாயம் மிகவும் கவனத்துடன் செயல்படுவோம். அந்த வகையில் அரிய வகை பூக்களில் ஒன்றான சங்கு பூவிலும் அத்தகைய மகத்துவம் இருக்கத்தான் செய்கிறது. இந்த பதிவில் புற்றுநோய் முதல் சர்க்கரை நோய் வரை பல நோய்களை தடுக்கும் சங்கு பூவை பற்றி முழுமையாக அறிந்து கொள்வோம்.


அற்புத பூ..!
நம் பூமியில் பல வகையான பூக்கள் இருக்கத்தான் செய்கிறது. பெரும்பாலான பூக்களில் எண்ணற்ற அதிசய குணங்கள் ஒளிந்து கொண்டிருக்கின்றன. சில பூக்களை இன்னும் நாம் அறிந்திருக்க கூட இருக்காது. ஒரு சில பூக்களே அதி பயங்கர தன்மைகளை கொண்டிருக்கும். அவற்றில் முதன்மையானது சங்கு பூ என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

மகத்துவம் பெற்ற சங்கு பூ..!
வண்ணமயமான நிறங்களை கொண்டது இந்த சங்கு பூ. வெள்ளை மற்றும் ஊதா நிறத்தில் இவை பொதுவாக காணப்படுகிறது. சங்கு போன்ற தோற்றத்தை கொண்டதால் இவை சங்கு பூ என்று மக்களால் அழைக்கப்படுகிறது. இவற்றில் எண்ணற்ற மருத்துவ குணங்கள் நிறைத்துள்ளதாக பண்டைய கால சித்த மருத்துவம் மற்றும் ஆயுர்வேதத்தில் கூறி இருக்கின்றனர்.

புற்றுநோய் செல்களை அழிக்கும் பூ
உடலில் பல நாட்களாக இருந்து கொண்டே நமக்கே அறியாமல் பல வித செயல்களை செய்யும் ஒரு கொடிய நோய்தான் புற்றுநோய். சங்கு பூவில் உள்ள ஃப்ளேவனாய்ட்ஸ் புற்றுநோய் செல்களை உடலில் உருவாகாமல் தடுக்கிறதாம். மேலும், உடலின் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து உடல் நலனை மேம்படுத்துமாம்.

கொலெஸ்ட்ரோல் குறைய
தேவையற்ற உணவு வகைகளை சாப்பிட்டு விட்டு பல வித நோய்களுக்கு இன்று நம்மில் முக்கால் வாசி பேர் அவதிப்படுகின்றோம். சத்தற்ற உணவு வகைகள், அதிக கொலஸ்ட்ரோலை உடலில் சேர்த்து விடும். இந்த கொலஸ்டரோலை குறைக்கும் சக்தி சங்கு பூவிற்கு இருக்கிறதாம். மேலும் கெட்ட கொழுப்புகளை கரைத்து வெளியில் தள்ளிவிடுமாம்.

குடற்புண்களுக்கு
சரியான நேரத்திற்கு சத்தான உணவுகளை சாப்பிடா விட்டால் அது கடைசியில் குடற்புண்ணாக பெரும் வடிவம் பெற்றிருக்கும். சங்கு பூ டீ குடற்புண்களை குணப்படுத்தும் மருத்துவ குணம் கொண்டதாக ஆராய்ச்சிகள் சொல்கிறது. மேலும் ஜீரண கோளாறுகள், வயிற்று எரிச்சல் போன்றவற்றையும் இது சரி செய்யும்.

காய்ச்சலை குணப்படுத்த
உங்களுக்கு திடீரென்று காய்ச்சல் அதிகமாக இருந்தால் இந்த சங்கு பூ நலம் பெற செய்யும். இவை உடலின் தட்பவெப்பத்தை சீரான நிலையில் வைக்க உதவுமாம். அத்துடன் இதன் கஷாயத்தை குடித்த 4 மணி நேரத்தில் காய்ச்சல் நின்று விடுமாம்.

சர்க்கரை நோயிற்கு
பல வகையான மருந்துகள் சர்க்கரை நோயிற்கு இருந்தாலும், இயற்கை ரீதியான மருந்துகளே அதிக பலனை தர கூடியது. அந்த வகையில் இயற்கையின் வர பிரசாதமான சங்கு பூ, சர்க்கரையின் அளவை உடலில் கட்டுப்படுத்துமாம். ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை சீராக்கி நீரிழிவு நோயாளிகளுக்கு பெரிதும் உதவும் என “காம்பிளிமெண்டரி மற்றும் ஆல்டர்னேட்டிவ் மெடிசின்’ என்ற ஆய்வு இதழில் கட்டுரை வெளியிடப்பட்டுள்ளது.

இதயத்தை மேம்படுத்தும் சங்கு
இன்று பெரும்பாலான மக்கள் அவதிப்படும் உடல் சார்ந்த பிரச்சினைகளில் இதய நோயும் முதன்மையான இடத்தில உள்ளது. இவற்றை குணப்படுத்த சங்கு பூ உதவுகிறது. சங்கு பூவின் விதைகள் மற்றும் வேர்களை பயன்படுத்தி, கஷாயம் தயாரித்து குடித்து வந்தால் இதய கோளாறுகள் நீங்கும்.

மன அழுத்தத்தில் இருந்து காக்கும் பூ..!
பெரும்பாலான மக்கள் இன்று அவதிப்படும் ஒரு பெரிய பிரச்சினை மன அழுத்தம் தான். தேவையற்ற எண்ணங்களை மனதில் போட்டு குழப்பி கொள்வதால் அது மன அழுத்தமாக வெளிப்படுகிறது. சங்கு பூ, நமது நரம்பு மண்டலத்தின் செயல்பாட்டை சீராக்கி மன அழுத்தம், பயம், தயக்கம் போன்றவற்றை சரி செய்யும்.ப்ளூ டீ…!எத்தனையோ வகை டீயை நாம் குடித்து இருப்போம். ஆனால் இந்த சங்கு பூ டீ, சற்றே வித்தியாசமானது. நீல நிற பூவை கொண்டு டீ தயாரித்தால் அவை நீல நிற டீயாக இருக்கும். வெள்ளை நிற பூவை கொண்டு டீ தயாரித்தல் சாதாரண நீரின் நிறத்திலே இருக்கும். இந்த டீ உடலுக்கு மிகவும் நன்மை தர கூடியதாம்.

தேவையானவை :-

தண்ணீர் 2 கப் , சங்கு பூ 5 , எலுமிச்சை சாறு , தேன்

செய்முறை :-
முதலில் நீரை நன்கு கொதிக்க விட்டு, அதில் சங்கு பூவை சேர்த்து 5 நிமிடம் கழித்து எடுத்து கொள்ளவும். பின் அவற்றுடன் சிறிது எலுமிச்சை சாறு, தேன் சேர்த்து கொண்டு குடித்து வந்தால் மேற்சொன்ன நன்மைகள் கிடைக்குமாம். இதனை சூடாகவும், குளிர்ந்த நிலையிலும் குடிக்கலாம்.

எச்சரிக்கை…
சங்கு பூ டீயை குடிக்க விரும்பினால் மருத்துவரின் ஆலோசனை பெற்று பருகுங்கள். மேலும், இவற்றை கர்ப்பிணி பெண்கள், பால் கொடுக்கும் தாய்மார்கள் தவிர்ப்பது நல்லது. மேலும், சர்க்கரை நோயாளிகள் இதன் பயனை பெற வேண்டுமென்றால் கட்டாயம் மருத்துவரை அணுக வேண்டும்.