30 வயதை தாண்டினாலே பெண்கள் தங்கள் அழகு குறித்து கவலைப்படுவதுண்டு. ஏனெனில் 30 வயது ஆகிவிட்டாலே பெண்களுக்கு முகச் சுருக்கம் ஏற்பட்டு விடுகின்றது.இதனை தடுக்க அழகு நிலையங்களுக்கு போய் அழகுபடுத்துவதை விட வீட்டிலே நாம் எளிய வழிகளைக் கையாளுவோம்.


தற்காலத்தில் தங்களின் அழகை வெளிப்படுத்திக் காட்டுவதில் பெண்களுக்கு அதிக ஆர்வமும், போட்டியும் இருக்கிறது.இயற்கையை மீறி சில செயற்கைத் தனங்களைச் செய்வதன் மூலம் தம்முடைய அழகை வெளிப்படுத்த எத்தனை முயற்சிகளில் இறங்கி பரீசித்துப் பார்ப்பவர்கள் இன்று ஏராளம். இதில் ஆண் பெண் என்ற பேதம் இல்லை…இயற்கையான முறையில், இயற்கையில் கிடைக்கும் பொருட்களைக் கொண்டே நம்முடைய உடலழகைப் பேண முடியும்.

தேவையான பொருட்கள்: தயிர், கிரீன் டீ பக்கட்டில் இருக்கும் டீ தூள், பிரஷ் தயிர், தக்காளி, முதலில் தக்காளியை சரி பாதியாக வெட்டி முகத்தில் தேய்த்து மசாஜ் செய்யுங்கள்.


முகம், கழுத்து, கை, கால், போன்ற பகுதிகளிலும் மசாஜ் செய்யுங்கள். ஒரு 5நிமிடம் விட்டு கழுவி விடுங்கள். அதன் பின் கிரீன் டீ தூளுடன் பிரஷ் தயிர் சிறிதளவு சேர்த்து பேஸ்ட் போல் செய்யுங்கள். அதில் விட்டமின் ஈ மாத்திரைகள் ஐந்து சேர்க்க வேண்டும்.

அதாவது விட்டமின் ஈ மாத்திரையின் மேற்பகுதியை வெட்டிவிட்டு அதில் இருக்கும் ஆயிலை தயிர் மற்றும் கிரீன் டீ தூளுடன் சேர்த்து நன்றாக மிக்ஸ் செய்யுங்கள்.இதனை பேஸ்பக் போல் முகம் கழுத்து கை போன்ற இடங்களில் போட்டு விட்டு 30 நிமிடம் அப்படியே விட்டு விடுங்கள். அதன் பின் வழமை போல் குளிர்ந்த நீரில் கழுவி விடுங்கள்.

இப்படி வாரம் இரண்டு முறை செய்து வாருங்கள், தோல் சுருக்கம், கறுப்பு அடையாளங்கள் முற்றிலும் நீங்கி இளமையான தோற்றம் பெருவீர்கள். அத்துடன் முகம் பளபளப்பான தோற்றம் கிடைக்கும். இதனை முயற்சி செய்து பாருங்கள். கண்டிப்பாக 100% வீதம் நல்ல ரிசல்ட் கிடைக்கும்..!