ஒருவரின் அழகை அதிகரித்து வெளிக்காட்டுவதில் முடி முக்கிய பங்கினை வகிக்கிறது. ஆனால் அத்தகைய முடியானது தற்போது மாசுக்கள் நிறைந்த சுற்றுச்சூழல், வாழ்க்கை முறை மற்றும் பழக்கவழக்கங்களினால் அதிகம் பாதிக்கப்பட்டு, முடி கொட்டுதல், அடர்த்தி குறைதல் போன்றவை ஏற்படுகிறது.

மக்கள் இயற்கை வழிகளை மறந்து செயற்கை வழிகளை பின்பற்ற ஆரம்பித்து, அதனால் பல்வேறு பக்க விளைவுகளை ஏற்படுத்துகிறது. முடி உதிர்வை தடுத்து, முடியின் அடர்த்தியை அதிகப்படுத்தி நன்றாக வளர்வதற்கு இயற்கையான வழி உள்ளது.

இதனை சரிசெய்ய நாம் ஒரு எளிய வழியை பார்ப்போம் இதற்கு தேவையான பொருட்கள் சுத்தமான நெல்லிக்காய் எண்ணெய், (amla oil) கற்றாழை ஜெல், மற்றும் முட்டையின் வெள்ளைக் கரு.முதலில் முட்டை ஒன்றை எடுத்து அதில் வெள்ளைக் கருவை மட்டும் எடுத்துக் கொள்ளுங்கள். எடுத்து வைத்த முட்டையின் வெள்ளை கருவில் இரண்டு கரண்டி நெல்லி எண்ணெய் சேருங்கள்.

அதனுடன் கற்றாழை ஜெல் சேருங்கள் சேர்த்து நன்றாக அடித்து மிக்ஸ் செய்து கொள்ளுங்கள். இதனை குளிப்பதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பு.. முடியின் வேர் கால்களில் படும் படி நன்றாக இந்த கலவையை தேய்த்து மசாஜ் செய்யுங்கள்.

இதனை வாரத்தில் இரண்டு முறை அல்லது ஒரு முறை செய்தால் போதுமானது. முடி கறுமையாகவும் அதே நேரம் அடர்த்தியாகவும் வளரும். அத்துடன் உதிர்ந்த முடிகள் மீண்டும் வளரும். இள வழுக்கை என்றால் முடி வளரும். சோ வழுக்கையிலும் முடி வளர மேல் குறிப்பிட்ட குறிப்பை பின் பற்றவும்..!