முதன் முறையாக நீச்சல் உடையில் அதுல்யா ரவி !! திணறும் இன்டர்நெட் !!

முதன் முறையாக நீச்சல் உடையில் அதுல்யா ரவி !! திணறும் இன்டர்நெட் !!

தமிழ் சினிமாவில் குறுகிய காலகட்டத்தில் டப்ஸ்மாஷ், குறும்படம் ஆகியவற்றில் நடித்து பெரிய ஹீரோங்களுக்கு ஈடாக பிரபலமானவர் நடிகை அதுல்யா ரவி. அவர் நடித்த பல குறும்படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றதால் இயக்குனர் சமுத்திரக்கனி இயக்கிய “ஏமாளி” படத்தில் முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் நடிக்கும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது. அதையடுத்து வெளிவந்த காதல் கண்கட்டுதே படம் அதுல்யாவிற்கு மிகப்பெரிய அடையாளத்தை ஏற்படுத்தி கொடுத்தது. பின்னர் சமுத்திரக்கனியின் இயக்கத்தில் நாடோடிகள்2, மற்றும் எஸ்.வி சந்திரசேகர் இயக்கத்தில் உருவாகிய “கேப்மாரி” படத்திலும் நடித்திருந்தார். இப்போது ஒரு சில படங்களில் அவர் நடித்து வந்தாலும், மிகப்பெரிய அளவில் வாய்ப்புகள் இல்லை. ஆனாலும் தன்னை தூக்கிவிட்ட சமூகவலைதளங்கள் மூலமாக எப்போதும் ரசிகர்களோடு தொடர்பில் இருந்தே வருகிறார். சினிமாவில் பாப்புலர் ஹீரோயினாக வலம் வருபவர் அதுல்யா ரவி. முதல் படமே அதுல்யா ரவிக்கு அதிக லைக்ஸ் போட வைத்தது.

அது தான் ‘காதல் கண் கட்டுதே’. இந்த படத்தை ஷிவராஜ் இயக்க, ஹீரோவாக கேஜி நடித்திருந்தார். ‘காதல் கண் கட்டுதே’ படத்தின் வெற்றிக்கு பிறகு நடிகை அதுல்யா ரவிக்கு அடித்தது ஜாக்பாட். அடுத்தடுத்து இவரின் கால்ஷீட் டைரியில் ‘ஏமாலி, நாகேஷ் திரையரங்கம், சுட்டுப் பிடிக்க உத்தரவு, அடுத்த சாட்டை, கேப்மாரி, நாடோடிகள் 2, என் பெயர் ஆனந்தன்’ என படங்கள் குவிந்தது. அதுல்யா ரவி சில படங்களில் மட்டுமே நடித்திருந்தாலும், இன்ஸ்டாகிராமில் தொடர்ந்து அசத்தலான போட்டோஷூட் ஸ்டில்ஸை ஷேரிட்டு வருவதால் அவருக்கென மிகப் பெரிய ரசிகர் பட்டாளம் இருக்கிறது. இப்போது நடிகை அதுல்யா ரவி நடிப்பில் ‘வட்டம், முருங்கைகாய் சிப்ஸ்’ என இரண்டு தமிழ் படங்கள் லைன் அப்பில் இருக்கிறது. இந்நிலையில், வெப் சீரிஸ் பக்கம் கவனம் திருப்பியுள்ள அதுல்யா ரவி தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் உருவாகவுள்ள முக்கோண காதல் சம்பந்தமான கதையம்சம் கொண்ட ஒரு வெப் சீரிஸில் முதன் முறையாக நீச்சல் உடையில் நடிக்க உள்ளார் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளது. இது குறித்த அதிகார பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனவும் தெரிகின்றது. அம்மணியின் நீச்சல் உடை தரிசனத்தை பார்க்க ரசிகர்கள் வெயிட்டிங்கில் உள்ளனர். இண்டர்நெட் திணறப்போகுது என்று கருத்தும் தெரிவித்து வருகின்றனர்.