இன்றைய காலங்களில் இள வயதிலேயே மூ ட்டுவ லி பிரச்சனைக்கு ஆளாகிறார்கள்.உடலில் வாதம், பித்தம், கபம் மூன்றில் வாதம் அதிகமாகும் போது தான் மூட்டுகள், எலும்புகள், தசைகள் பகுதிகளில் வலி உபாதை தெரியக்கூடும்.மூ ட்டுவ லி தொடங்கும் நிலையில் ஆரம்ப கட்டத்தில் இதன் அறிகுறிகள் இருந்தால் நடக்கும் போது, படிக்கட்டில் ஏறும் போதும் கால் மூட்டுகளில் ஒருவித சத்தம் கேட்கும். இது மூட்டுவலியின் ஆரம்ப அறிகுறிகளாக இருக்கலாம்.


இப்படியான அறிகுறிகள் தோன்றும் போதே அதை குறைக்க முயற்சி செய்ய வேண்டும். இல்லையெனில் தீவிர வலி உபாதை உண்டாகும்.எனவே இவற்றை ஆரம்பத்திலேயே சரி செய்வது நல்லது. அந்தவகையில் தற்போது முட்டு வ லியை சரி செய்யக்கூடிய ஓர் சூப்பரான சூப் ஒன்றை எப்படி தயாரிப்பது என பார்ப்போம்.

தேவையானவை

முடக்கத்தான் கீரை , சீரகம் . மிளகுத்தூள் . உப்பு

தயாரிப்பது எப்படி?

முடக்கத்தான் கீரை ஒரு கைப்பிடி அளவு எடுத்து சுத்தம் செய்து மண் சட்டியில் சேர்த்து இரண்டு டம்ளர் நீர் விட்டு கொதிக்க விடவும்.இவை ஒரு டம்ளராக சுண்டும் வரை கொதிக்க விட்டு இறக்கி மத்து கொண்டு மசித்து வடிகட்டவும். இதனுடன் சீரகம், மிளகுத்தூள், உப்பு சேர்த்து குடிக்கவும்.


தினமும் ஒரு முறை குடித்து வந்தால் போதும். வெறும் வயிற்றில் குடிக்க வேண்டியதில்லை. காலை உணவுக்கு பிறகோ அல்லது நண்பகல் உணவுக்கு பிறகோ இதை குடிக்கலாம்.இது குடித்து முடித்த அரை மணி நேரம் வரை வேறு எதையும் குடிக்க கூடாது. ஒரு டம்ளர் அளவுக்கு மேல் அதிகம் எடுக்க வேண்டாம்.தொடர்ந்து 21 நாட்கள் வரை குடித்து வந்தால் மூட்டுவலியின் தீவிரம் குறையக்கூடும். வளரும் பிள்ளைகளுக்கு இதை கொடுத்து வந்தால் எலும்பு பலப்படும்.

எப்படி குடிக்கலாம்?
குழந்தைகளுக்கும் வளரும் பருவத்தில் இருப்பவர்களுக்கும் முடக்கத்தான் கீரை சூப் அப்படியே கொடுக்காமல் இதை ரசத்தில் சேர்த்து கொடுக்கலாம்.மறுக்காமல் சாப்பிடுவார்கள். வாரத்தில் மூன்று நாட்கள் இதை சேர்த்து வந்தால் எதிர்காலத்தில் மூட்டுவலி பிரச்சனைகள் உண்டாக்காமல் பார்த்துகொள்ளலாம்.இளவயதில் மூட்டுகளில் உண்டாகும் தேய்மானம் குறையக்கூடும். எலும்புகள் வலிமையாகும்.