சர்க்கரை நோய் இன்று நம்மில் பலரையும் அச்சுறுத்தும் வியாதியாக உள்ளது. வீட்டில் ஒருவருக்கு கண்டிப்பாக சர்க்கரை நோய் இருக்கிறது. இப்படியான சூழலில் ஆங்கில அலோபதி மருத்துவமே இல்லாமல், வீட்டிலேயே இயற்கையாக ஒரு டானிக் தயாரித்து ரத்த சர்க்கரையை ஓட, ஓட விரட்டலாம். அது குறித்து தெரிந்துகொள்ள மேலே படியுங்கள்.


வெந்தயக் கீரையை இலையாக எடுத்துக் கொள்ள வேண்டும். அதை நன்றாகத் தண்ணீரில் கழுவ வேண்டும். இப்போது ஒரு பாத்திரத்தை எடுத்துக் கொண்டு, அதில் ஒரு கப் தண்ணீரை ஊற்ற வேண்டும். இந்த தண்ணீரில் ஒரு டேபிள் ஸ்பூன் வெந்தயக் கீரையை போட வேண்டும். இப்போது இந்த பாத்திரத்தை 5 முதல் 6 நிமிடங்கள் வரை மிதமான சூட்டில் சூடுபடுத்த வேண்டும்.

இப்போது நமக்கு வெந்தய கசாயம் தயாராகி விடும். இதை நன்றாக வடிகட்டி ஒரு கப்பில் எடுத்துக் கொள்ள வேண்டும். இந்த கசாயத்தை வெறும் வயிற்றில் காலை அல்ல்து மாலையில் குடிக்கலாம். இது உடலுக்கு ஆரோக்கியம் தருவதோடு, இரத்த சர்க்கரையையும் கணிசமாக குறைக்கிறது. அதிலும் தினசரி காலையில் குடிக்கும் போது, இது நம் உடலில் பெரும் மேஜிக்கையே நிகழ்த்திவிடும்.


அதே போல் வெந்தய இலைக் கசாயம் உடல் எடை குறைப்பிலும் முக்கியப் பங்கு வகிக்கிறது. செரிமானக் கோளாறுக்கும் இது அருமருந்து. அப்புறமென்ன ஒரு வாரம் முயற்சி செய்யுங்க…அப்புறம் உங்க ரத்த சர்க்கரையின் அளவை சோதிச்சுப் பாருங்க!…