இன்றைய காலகாட்டத்தில் முடி உதிர்வு, பொடுகு தொல்லை மற்றும் வழுக்கை என முடி சார்ந்த பிரச்சினைகள் பத்தில் 6 பேருக்கு உள்ளது என ஒரு ஆய்வு சொல்கின்றது.முடியில் ஏற்பட கூடிய பிரச்சினைக்கு நாம் தான் முதல் காரணமாக உள்ளோம். இதை சரி செய்ய ஏதேதோ வழிகளை தேடும் நாம் இயற்கையில் உள்ள வழிகளை மறந்து விடுகின்றோம்.


இயற்கை ரீதியாகவே முடியின் எல்லாவித பிரச்சினைகளுக்கும் தீர்வை கண்டு விடலாம். அதுவும் இந்த கருப்பு எண்ணெயை வைத்து முடியின் அனைத்து பிரச்சினைக்கு தீர்வை கண்டு விடலாம்.

உங்களின் சாலவிதமான முடி சார் பிரச்சினைகளிற்கும் இலகுவானதும் விரைவானதுமான தீர்வாக பப்பாளி காணப்படுகின்றது. இதற்கு, முதலில் 5 துண்டு பப்பாளியை நன்றாக அரைத்து, அதனுடன் 2 கரண்டி தேங்காய் எண்ணெய் மற்றும் 1 கரண்டி ஆலிவ் எண்ணெய் சேர்த்து நன்றாக கலந்து கொண்டு தலைக்கு தடவி, 30 நிமிடங்கள் கழித்து தலைக்கு குளிக்கவும். இவ்வாறு வாரத்திற்கு 1 முறை செய்து வரும் போது சிறப்பானதும் விரைவானதுமான பலனைப் பெற முடியும்.

முடியின் வளர்ச்சியை அதிகரிக்க, 5 துண்டுகள் பப்பாளி மற்றும் ஒரு கைப்பிடி அளவுள்ள கருவேப்பிலையை சேர்த்து நன்கு அரைத்து, அந்த கலவையுடன் 3 கரண்டி யோகர்ட் கலந்து தலையின் ஒவ்வொரு பகுதியிலும் தடவி, 20 நிமிடங்கள் ஊற வைய்த்து, பின்னர் தலையை அலசி வரும் போது முடி சீக்கிரத்திலே வளரும்