ஸ்பைடர் வெயின் அல்லது நரம்பு சிலந்தி என்று அழைக்கப்படும் இந்த நோயில் நரம்புகள், ஊதா நிறத்தில், சிகப்பு அல்லது நீல நிறத்தில் வீங்கி, ஒன்றொடு ஒன்று பின்னி, முறுக்கப்பட்ட மெல்லிய கோடுகள் போல் காட்சியளிக்கும்.


இந்த வீக்கமடைந்த நரம்புகளை தோலின் வெளிப்புறத்திலேயே தெளிவாக பார்க்க முடியும். கணுக்கால், கால்கள், முகம் மற்றும் தொடைப் பகுதியில் இன்னும் தெளிவாக இது தெரியும். முதியவர்களில் 30-60% பேர் இந்த நோயினால் பாதிக்கப்படுகிறார்கள். இந்த நோய் ஏற்பட பல விதமான காரணங்கள் உள்ளது.

வல்லாரை
தற்போது மூலிகை மருத்துவத்தில், வல்லாரை சோர்வுகளை குறைக்க, வலி, வீக்கங்களை குறைக்கவும், கால் கனத்த உணர்வுகளை குறைக்கவும், நரம்புகளில் இருந்து திரவம் வெளியேறுவதை நிறுத்தவும் பயன்படுகிறது. வல்லாரை டீ நரம்பு சிலந்தி வியாதிக்கு நல்ல மருந்தாகும். இந்த டீயை தயாரிக்க ஒரு டேபிள்ஸ்பூன் வல்லாரை இலைகளை ஒரு கப் சுடுநீரில் போட்டு சுமார் 10-15 நிமிடங்களுக்கு மூடி வைத்து விட வேண்டும். பிறகு இதை வடிகட்டி தேவைப்பட்டால் தேன் கலந்து 2-3 முறை நாள்தோறும் குடிக்க வேண்டும்.

மேலும் சில இதர வழிகள் பின்வருமாறு…

பைன் மர பட்டைகள்
பைன் மர பட்டைகளில் “ஓலிகோமெரிக் பிராந்தோசைடினைன்” என்னும் பொருள் இருப்பதால் இது நரம்பு சிலந்திக்கு அருமருந்தாக செயல்படும். இந்த பட்டைகள் நமது இரத்த திசுக்களில் உள்ள பிரச்சனைகளை சரியாக்கி இரத்த ஓட்டத்தை அதிகப்படுத்தும். புதிய பைன் மர பட்டைகளை எடுத்து கொள்ள வேண்டும்.

கடற்கரை பகுதியில் உள்ள பைன் மர பட்டைகள் கிடைத்தால் இன்னும் சிறப்பு. இந்த பட்டைகளை நன்கு கழுவி எடுத்து கொள்ள வேண்டும். ஒரு பாத்திரத்தில் 8 கப் தண்ணீர் சேர்த்து நன்கு கொதிக்க வைத்து, அதில் இந்த பட்டைகளை போட்டு மூடி வைத்து, தண்ணீர் பாதியாக வற்றும் வரை கொதிக்க விட வேண்டும்.

பின்னர் இதை மெல்லிய துணியின் மூலம் வடிகட்டி, ஒரு ஜாரில் ஊற்றி வைத்து கொள்ள வேண்டும். பயன்படுத்திய இந்த பட்டைகளை பாத்திரத்தில் போட்டு 4 கப் தண்ணீர் சேர்த்து மறுபடியும் கொதிக்க விட வேண்டும். தண்ணீர் பாதியாக வற்றிய பின், வடிகட்டி ஏற்கனவே உள்ள ஜாரில் இதையும் சேர்த்து விட வேண்டும்.

இந்த மொத்த பைன் நீரையும் மறுபடியும் கொதிக்க விட்டு, 1/4 கப் அளவுக்கு வற்றிய பின் இதை, ஒரு ஜாரில் ஊற்றி வைத்து விட வேண்டும். நாள்தோறும் 2-3 முறை வலி உள்ள இடத்தில் மசாஜ் செய்ய வேண்டும்.

குறிப்பு : பைன் மர சாற்றை மாத்திரைகள் மூலமாக எடுத்து கொள்ளும் போது, ஒரு நாளுக்கு 45-360 மில்லி கிராம் அளவு அல்லது 50-100 மில்லி கிராம் அளவு மூன்று வேளை சாப்பிட வேண்டும்.

திராட்சை விதை எண்ணெய்
திராட்சை விதை எண்ணெய் மற்றும் ஜொஜோபா எண்ணெய் தலா மூன்று டேபிள் ஸ்பூன் எடுத்து கொண்டு, இதை 8 துளிகள் எலுமிச்சை எண்ணெய் / புதினா எண்ணெய் / ஜீரேனியம் எண்ணெய் அல்லது நமக்கு பிடித்த ஏதேனும் ஒரு நறுமண எண்ணெயுடன் கலந்து கொள்ள வேண்டும்.

இதை நரம்பு சிலந்தியினால் பாதிக்கப்பட்ட கணுக்கால், கால்கள் அல்லது வலி உள்ள இடத்தில் நன்கு தடவி கீழிருந்து மேல்நோக்கி மசாஜ் செய்ய வேண்டும். அதாவது பாதத்தில் இருந்து கால்கள் நோக்கி செய்ய வேண்டும்.

நாம் இந்த திராட்சை விதை எண்ணெயை மாத்திரை மாதிரியோ அல்லது கேப்ஸுல்கள் அல்லது சிரப் மாதிரி கூட எடுத்து கொள்ளலாம். நாள்தோறும் ஒரு வேளை 150 மி.கிராம் சாப்பிட வேண்டும் அல்லது ஒரு நாளுக்கு மூன்று வேளை 50 மி.கிராம் சாப்பிட வேண்டும்.

ஸ்பைடர் வெயினால் ஏற்படும் வலி, வீக்கம், கால் கூச்சல் மற்றும் கால் எரிச்சல் போன்றவற்றை இது குறைக்கும். அல்லது நேரடியாகவே நாம் திராட்சை விதைகளை சவைக்க வேண்டும் அல்லது திராட்சை விதைகளை பொடியாக்கி எடுத்து கொண்டு சூப்களில் கலந்து சாப்பிடலாம். இது கசந்தாலும் உடம்புக்கு மிகவும் நல்லது.

குறிப்பு: இந்த மருந்தை கர்ப்பிணி பெண்களும், குழந்தைகளுக்கு பாலூட்டும் தாய்மார்களும், இரத்த அடர்த்தியை குறைக்க மாத்திரை சாப்பிடும் குழந்தைகள் தவிர்க்க வேண்டும்.

செய்யக்கூடாதவை
கால் மேல் கால் போட்டு உட்கார கூடாது. அதைப் போல் கணுக்கால் மேல் கணுக்கால் போட்டும் உட்கார்வதை தவிர்க்க வேண்டும். ஹை ஹில்ஸ் வைத்த செருப்புகளை அணியக்கூடாது. நீண்ட நேரம் நிற்பது அல்லது உட்கார்வதை தவிர்க்க வேண்டும்.

அப்படி நீண்ட நேரம் வேலை செய்யுமாறு சூழ்நிலை ஏற்பட்டால், ஒவ்வொரு அரை மணி நேரத்திற்கு ஒரு முறை சிறிய இடைவெளி எடுத்து கொண்டு கொஞ்சம் தூரம் நடப்பது, உட்காரும் நிலையை மாற்றி உட்கார்வது, கொஞ்சம் நேரம் நிற்பது அல்லது ஸ்ட்ரேட்சிங் செய்வது போன்றவற்றை செய்யலாம்.நீண்ட நேரம் அமர்ந்து இருக்கும் போது, கால்களை நாற்காலி அல்லது ஸ்டூல் உதவியுடன் சிறிது உயர்த்திய நிலையிலேயே வைத்து கொள்வது சிறந்தது. இறுக்கமான ஆடைகளை அணிவதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும். குடிப்பழக்கம் மற்றும் புகை பிடிக்கும் பழக்கத்தை அறவே விட்டு விட வேண்டும்.

செய்ய வேண்டியவை :
தினசரி உடற்பயிற்சி செய்ய வேண்டும். உடலை வலுப்படுத்தும் மற்றும் இதய ஆரோக்கியத்திற்கு ஏற்ற உடற்பயிற்சிகளை தவறாமல் கடைப்பிடிக்க வேண்டும். கால்களை எப்போதும் தூக்கிய நிலையிலே வைக்க வேண்டும். படுக்கும் போது அல்லது உறங்கும் போது கூட கால்களை உயர்த்தியவாறே உறங்க முயற்சிக்க வேண்டும்.

உடல் எடை அதிகம் இருப்பது நரம்பு சிலந்தி பிரச்சனைக்கு முக்கிய காரணம். அதனால் உடல் எடையை கட்டுக்குள் வைத்து கொள்ள வேண்டும். பழங்கள், பச்சை காய்கறிகள், முழு கோதுமை உணவுகள், வேர்க்கடலை மற்றும் பருப்பு வகைகளை அதிகம் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.