உடல் பருமன் தான் உலகம் முழுவதும் உள்ளவர்களை அச்சுறுத்துகிற விஷயமாக இருக்கிறது. ஏனென்றால் இதய நோயால் தான் பெரும்பாலும் இறந்து போகிறார்கள். அந்த இதய நோய்க்கு மிக அடிப்படையான ஆதாரமாக இருப்பதே இந்த உடல் பருமன் தான். இதற்கு மருத்துவ சிகிச்சைகள் பல இருந்தாலும் அவை பக்க விளைவுகளை ஏற்படுத்தக்கூடியவை. அதனால் இயற்கையாக கிரீன் டீ போன்ற உணவக் கட்டுப்பாடுகள் மற்றும் உடற்பயிற்சியின் மூலம் குறைப்பது தான் நல்லது.


டயட்டுகள்
டயட் என்றால் நாம் ஏதோ பெரிய கஷ்டமான விஷயம் என்று நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் உண்மையில் டயட் என்பதன் பொருள் என்னவென்றால் உணவுக் கட்டுப்பாட்டு முறை என்பது தான். இன்றைய காலகட்டத்தில் டயட்டுக்கா பஞ்சம். எக்கச்சக்க டயட்டுகள் இருக்கின்றன. அதிலும் எடையைக் குறைப்பதற்கென்று மிலிட்டரி டயட், பேலியோ டயட், கீட்டோ டயட் என எக்கச்சக்க டயட்டுகள் மக்களால் பின்பற்றப்பட்டு வருகின்றன. ஆனாலும் அவ்வளவு பெரிய ரிசல்ட் நிரந்தரமாகக் கிடைப்பதில்லை.

சிம்பிள் டீ
அப்படி சிலர் எல்லா டயட்டையும் ஃபாலோ பண்ணிட்டேன். ஆனா என் தொப்பை என்ன ஃபாலோ பண்ணிக்கிட்டே தான் இருக்கு என்று புலம்புபவர்கள் பலரையும் நாம் பார்த்திருப்போம். அவர்களுக்கு ஒரு சிறந்த தீர்வாகவாகவும் அவர்களால் நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு ஒரு மேஜிக்கல் மாற்றத்தை இந்த மட்டுமே ஏற்படுத்தும். உங்களுக்குப் பிடித்த எல்லாவற்றையும் சாப்பிடலாம். ஆனா இந்த டீயை மடடும் ஒரு நாளைக்கு 2 முதல் 3 முறை குடிங்க போதும். எப்பேர்ப்பட்ட பானை வயிறு ஒரே மாசத்துல குறைஞ்சு நீங்க சிக்குனு ஆயிடுவீங்க. இது சொந்த அனுபவத்துல சொல்றது. நம்பி இறங்குங்க.

கருஞ்சீரக டீ தயாரிப்பது எப்படி?

கருஞ்சீரகம் – 2 ஸ்பூன் , ஸ்பூன் புதினா – ஒரு கைப்பிடியளவு , இஞ்சி – 1 இஞ்ச் அளவு , தேன் – 2 ஸ்பூன்

செய்முறை
முதலில் ஒரு பாத்திரத்தில் அரை லிட்டர் அளவுக்கு தண்ணீர் ஊற்றி சூடுபடுத்த வேண்டும். தண்ணீர் சூடேறியதும் அதில் 2 ஸ்பூன் கருஞ்சீரகத்தைப் போட்டு நன்கு கொதிக்க வைக்க வேண்டும். அப்படி கொதித்துக் கொண்டிருக்கும் நேரத்தில் இஞ்சியைத் தோல் சீவி நன்கு நசுக்கி (தட்டி) அதில் போட வேண்டும். அதன்பின் அடுப்பை சிறு தீயில் குறைத்துக் கொண்டு, அதில் புதினா இலைகளையும் கொஞ்சம் ஒன்றிரண்டாக நசுக்கியோ கசக்கியோ அதில் போட்டு கொதிக்க விட வேண்டும். புதினா போட்டு இரண்டு நிமிடங்களில் அடுப்பை நிறுத்திவிட வேண்டும்.