வெளியே ஒரு காதலி இருக்க, அபிராமியை காதலிக்கும் பாலாஜி ? நிரூப்பிடம் போட்டு கொடுத்த வனிதா !

வெளியே ஒரு காதலி இருக்க, அபிராமியை காதலிக்கும் பாலாஜி ? நிரூப்பிடம் போட்டு கொடுத்த வனிதா !

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வெற்றிகரமாக முடிவடைந்த பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை அபிராமி. இவர் பரதநாட்டியத்தில் மிகச் சிறந்த கலைஞர். இவர் மாடலிங் மூலம் தான் மீடியாவுக்குள் நுழைந்தார். அதன் பின் சிறு சிறு கதாபாத்திரத்தில் நடித்தார். பின் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் இவர் மக்கள் மத்தியில் பிரபலமானாலும் மக்கள் மத்தியில் வெறுப்பை சம்பாதித்து கொண்டார் என்று சொல்லலாம். இந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் இவருடைய ஆடை, மதுமிதாவிற்கும் இவருக்கும் இடையே நடந்த கலாச்சாரம் பிரச்சனை, அபிராமி –கவின் காதல், முகென் காதல் என இவரது பிரச்சனை சமூக வலைத்தளங்களில் பயங்கர பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால், இதை எல்லாம் மறக்கும் வகையில் இவருடைய படம் அமைந்தது.

இந்த நிலையில் இதுகுறித்து வனிதா,நிரூப், தாடி பாலாஜி மூவரும் பேசிக்கொண்டிருக்கிறார்கள். அதில் வனிதா கூறியிருப்பது, அபிராமி உண்மையில் ஏமாளி என்று தான் சொல்லணும். யார் எது சொன்னாலும் எளிதாக நம்பி விடுகிறார். இதனால் அவளை வைத்து பல பேர் விளையாடுகிறார்கள். அதேபோல் நான் பாலாஜி பற்றியும் அபியிடம் சொல்லியிருந்தேன். ஆனால், அவள் புரிந்து கொள்ளவில்லை. ஏன்னா, நான் பாலாஜியிடம் பிக் பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சிக்கு பின் பேசும்போது, நீதான் இரண்டாம் இடத்தைப் பிடித்து வெற்றி பெற்றாய். எதற்காக அல்டிமேட் நிகழ்ச்சிக்கு வந்திருக்கிறாய்? என்று நான் கேட்டேன். அதற்கு பாலாஜி நான் ஒரு பெண்ணை காதலிக்கிறேன். அவளுக்காக தான் இந்த நிகழ்ச்சியில் கலந்து பணம் சம்பாதிக்கணும் என்று வந்து இருக்கிறேன் என்று கூறினார். ஆனால் இங்கு வந்த பின் பாலாஜி இதை நீங்கள் வெளியில் யாரிடமும் சொல்ல வேண்டாம் என்றும் சொன்னார்.