ஷாலினியை திருமணம் செய்யாதே.. அப்போதே அஜித்திற்கு அறிவுரை கூறிய நண்பர்! ஏன் தெரியுமா?

ஷாலினியை திருமணம் செய்யாதே.. அப்போதே அஜித்திற்கு அறிவுரை கூறிய நண்பர்! ஏன் தெரியுமா?

தமிழ் சினிமாவில் உச்ச நடிகர்களில் ஒருவர் தான் அஜித் குமார். அண்மையில் இவர் நடித்திருந்த வலிமை படம் திரைக்கு வந்து விமர்ச்சியான வரவேற்பை பெற்றிருந்தது. எப்போதுமே நடிகர் அஜித் எந்த செயல் செய்தாலும், அவருடைய பிஆர்ஓ மூலம் தான் வெளியிடுவார். அஜித்தை போலவே அவரது குடும்பமும் எந்த சமூக வலைத்தள பக்கத்திலும் இல்லை. இந்நிலையில், சமீபத்தில் அஜித் மனைவி ஷாலினியுடன் கட்டியணைத்திருக்கும் புகைப்படம், ஷாலினி தங்கை ஷாமிலி வெளியிட்டு இருந்தது இணையத்தில் வைரலாகியது. இதனிடையில், அஜித் மற்றும் ஷாலினி இருவருக்கும் இடையே அமர்களம் படம் நடிக்கும்போதே காதல் வயப்பட்டுள்ளது.

அப்போது ஆரம்பத்திலேயே ஷாலினியை திருமணம் செய்து கொள்ள வேண்டாம் என அஜித்திடம் அவருடைய நண்பர் ரமேஷ் கண்ணா தெரிவித்து இருக்கிறார். ரமேஷ் கண்ணாவும் நண்பராக படத்தில் நடித்திருந்தார். அவரின் அறிவுரை அஜித் அப்போது கேட்கவில்லை. சினிமா வட்டாரத்தில் உள்ள இருவரும் திருமணம் செய்தால் யாராவது ஒன்றை விட்டுக் கொடுக்க வேண்டும். ஆனால் அஜித், ஷாலினி மீது உள்ள அதீத காதலால் அவரை திருமணம் செய்துகொண்டார். இதனால் யாராவது ஒருவர் விட்டுக் கொடுக்க வேண்டும் என்பதால் ஷாலினி நடிப்பதை நிறுத்திக் கொண்டார்.

By admin