20 வருஷமா கோவில் பூசாரியாக இருக்கும் நடிகர் யோகி பாபுவின் அண்ணன் !! கைவிட்டுவிட்டாரா யோகிபாபு ?

20 வருஷமா கோவில் பூசாரியாக இருக்கும் நடிகர் யோகி பாபுவின் அண்ணன் !! கைவிட்டுவிட்டாரா யோகிபாபு ?

தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகராக திகழ்ந்து வரும் நடிகர் யோகி பாபுவின் அண்ணன் குறித்த தகவல் வெளியாகி ரசிகர்களை ஆச்சரியப்படுத்தியுள்ளது. சினிமா பிரபலங்களை பொருத்தவரை ஒருவர் நடிக்க வந்தால் அவர்களின் குடும்பத்தினரும் பெரும்பாலும் சினிமாவில் தான் இருப்பார்கள். ஆனால் நடிகர் யோகிபாபுவின் அண்ணன் கோவில் பூசாரியாக இருக்கின்றார்.இந்த தகவல் வெளியானதில் இருந்து ரசிகர்கள் ஆச்சரியத்தில் அவர் குறித்த தகவல்களை தேடி வருகின்றனர். அது மட்டும் இன்றி யோகிபாபுவின் அண்ணன் சக்தி யோகி ராஜா ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலும் இணையத்தில் வைரலாகி வருகின்றது. 20 வருஷத்துக்கு மேலாக நான் ஆன்மிகத்தில் இருக்கிறேன். அதற்கு முன் நான் டிராவல்ஸ் வைத்திருந்தேன். இந்த ஆன்மீகம் நான் ஆரம்பித்தது கிடையாது. என்னுடைய முன்னோர்கள் காலத்திலிருந்து இந்த மாதிரி ஆன்மீகத்தில் இருக்கிறோம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

அதேபோல் எங்கள் தாத்தா காலத்தில் ஒரு நாடக கம்பெனி இருந்தது. ஆனால், நான் சினிமாவில் நடித்தது கிடையாது. எனக்கு சின்ன வயதிலிருந்தே ஆன்மிகம் தான். மேலும், எனக்கு ரொம்ப பிடித்த ஊர் திருவாலங்காடு காளிகாம்பாள் கோயில் மேல்மலையனூர். எங்களுடைய குலதெய்வம் பெரியாண்டவர் பச்சையம்மன். எங்களுடைய குலதெய்வம் பெரியாண்டவர் கோயில் விசேஷமாக செய்வார்கள்.அதேபோல் வராகியும் எங்களுக்கு குலதெய்வம் தான். அவளுடைய சாதனைகள் ஏராளம் உண்டு. நானும் அவளை உணர்ந்து இருக்கிறேன். அவளைத் தேடி கோயிலுக்கு வரும் மக்களுக்கு அருள்வாக்கு சொல்வார். அத்தனையும் நடந்து நல்லது கிடைத்தவுடன் எல்லோரும் கோயிலுக்கு வருவார்கள். அதுவே அவள் இருப்பதற்கான உதாரணம். முன்ஜென்ம கர்ம வினை நீக்கக் கூடியவள் வராகி. இவை தவிர பெரிய ஆண்டவர், கருமாரி, காளியம்மன் இந்த சாமிகள் எல்லாம் எனக்கு ஈடுபாடு இருக்கிறது.நான் எதையும் சாதிக்க விருப்பமில்லை. மனிதனால் எந்த சாதனையும் செய்ய முடியாது. என்னை பொறுத்தவரையில் நான் அதை ஏற்றுக்கொள்ள மாட்டேன். அம்மாள் சாதிப்பதை நான் வேடிக்கை பார்க்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார். இந்த வீடியோ இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது.

By admin