365 நாளும் 365 புதிய புடவைகளை கட்டும் பிரபல சீரியல் நடிகை !! ஒரு முழு வீட்டையே புடவைகளுக்காக வைத்திருக்காராம் !

365 நாளும் 365 புதிய புடவைகளை கட்டும் பிரபல சீரியல் நடிகை !! ஒரு முழு வீட்டையே புடவைகளுக்காக வைத்திருக்காராம் !

1980ம் ஆண்டில் இருந்து தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு என பல மொழிகளில் நடித்து வருபவர் நளினி. இவர் 1987ம் ஆண்டு பிரபல நடிகர் ராமராஜனை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு அருணா மற்றும் அருண் என டுவின்ஸ் இருக்கிறார்கள். பின் சில காரணங்களால் நளினி மற்றும் ராமராஜனுக்கு விவாகரத்து பெற்றனர். ராமராஜன் நடிப்பை எப்போதோ நிறுத்திவிட்டார், ஆனால் நளினி தொடர்ந்து படங்கள் நடித்து தான் வருகிறார். அதிலும் அவர் சீரியல்களில் அதிகம் கமிட்டாகி நடிக்கிறார். இப்போது வள்ளி திருமணம் சீரியலில் கமிட்டாகி நடித்து வருகிறார். நளினி பேட்டி ஒன்றில் தன்னைப் பற்றிய ஒரு விஷயம் கூற மக்கள் அனைவரும் ஆச்சரியப்பட்டுள்ளனர்.

அதாவது நடிகை நளினி 365 நாளும் 365 புதிய புடவையை அணிவாராம், ஒரு வீடு முழுவதும் புடவைகள் தான் வைத்துள்ளாராம். என்னுடைய வீடு ஒன்றை வாடகைக்கு கொடுக்காமல் புடவைக்காகவே வைத்துள்ளேன் என்று கூறியுள்ளார்.