56 வயது திருமணம் ஆகாத நடிகருடன் ஜோடியாகும், 37 வயது நடிகை நயன்தாரா..

56 வயது திருமணம் ஆகாத நடிகருடன் ஜோடியாகும், 37 வயது நடிகை நயன்தாரா..

தமிழ், தெலுங்கு, மலையாளம் என மூன்று மொழிகளிலும் முன்னணி கதாநாயகியாக இருப்பவர் நடிகை நயன்தாரா. மேலும், அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடிப்பில் உருவாகி வரும் படத்தின் மூலம் பாலிவுட் திரையுலகிலும் கால்பதித்துவிட்டார் நயன்தாரா. இதுமட்மின்றி காத்துவாக்குல ரெண்டு காதல், கனெக்ட், காட் பாதர் ஆகிய படங்களும் நயன்தாரா கைவசம் உள்ளனர். இந்நிலையில், நடிகை நயன்தாரா அட்லீ இயக்கத்தில் ஷாரூக்கானுடன் நடித்ததை தொடர்ந்து சல்மான் கானுடனும் இணைந்து நடிக்கவுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. சல்மான் நடிப்பில் உருவாகவுள்ள புதிய படத்தில், கதாநாயகி நடிக்க நயன்தாரா கமிட்டாகியுள்ளதாக கூறப்படுகிறது. 56 வயதாகியும் திருமணம் ஆகாமல் இருக்கும் நடிகருடன் நயன்தாரா ஜோடியா என்று தற்போதே இணையத்தில் நெட்டிசன்கள் கிசுகிசுகின்றனர்.

மலையாளத்தில் பிரித்திவிராஜ் இயக்கத்தில், மோகன்லால் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற திரைப்படம் லூசிபர். இந்தப் படத்தை தெலுங்கில் காட்பாதர் என்ற பெயரில் ரீமேக் செய்து வருகின்றனர். மோகன்ராஜா இந்த ரீமேக்கை இயக்கி வருகிறார். மோகன்லால் நடித்த வேடத்தில் சிரஞ்சீவி நடிக்கிறார். மலையாளத்தில் மஞ்சுவாரியர் நடித்த வேடத்தில் நயன்தாரா நடிக்கிறார். இதன் படப்பிடிப்பு ஏறக்குறைய முடிவடையும் நிலையை எட்டியுள்ளது.

By admin