Categories
Health Tips

பல் புழுவை வெளியேற்றி பல்வலி மற்றும் பல் சொத்தையை போக்க சிறந்த வழி

நம் தாத்தா பாட்டி காலத்தில் வேப்பங்குச்சியை கொண்டு பல் துலக்கினார்கள். அதனால் பற்கள் சம்பத்தப்பட்ட பிரச்சனைகள் எதுவும் எளிதில் வராது. ஆனால் இன்றய நிலையில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரிடமும் இந்த பற்கள் சம்பத்தப்பட்ட பிரச்சனை உள்ளது. பற்களில் ஏற்படும் பிரச்சனை வீக்கம், வலி, கூச்சம், சொத்தை ரத்த கசிவு இவைகளை அலட்சியப்படுத்தாமல் உடனடி சிகிச்சை மேற்கொள்வதுதான் சால சிறந்தது.


பற்கள் சம்பத்தை பட்ட பிரச்சனையில் மிக முக்கியமானது பல் சொத்தை. இது சிறியதாக ஆரம்பித்தாலும் முடிவில் பெரும் விளைவை ஏற்படுத்தி விடுகிறது. பற்களில் சொத்தை ஏற்படும் போது கடுகின் அளவை விட சிறியதாக தெரியும், ஆனால் அது கடைசியில் பற்களை மெது மெதுவாக அரித்து பெரும் பாதிப்பை ஏற்படுத்தி விடுகிறது.

தினமும் காலையில் நல்லெண்ணெயை வாயில் ஊற்றி 10 நிமிடங்கள் வாயினுள் வைத்து கொப்பளிக்க வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம், வாயில் உள்ள அனைத்து பாக்டீரியாக்களும் வெளியேறி பற்களை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள முடியும். அதேபோல் சொத்தை பற்கள் ஏற்படுவதை தடுக்கலாம்.


தினமும் இரவில் தூங்கும் போது 2-3 துளிகள் கிராம்பு எண்ணெயை 1/4 டேபிள் ஸ்பூன் நல்லெண்ணெயுடன் கலந்து, காட்டன் துணியில் அந்த எண்ணெயை தொட்டு இரவில் தூங்கும் போது சொத்தை பற்கள் உள்ள இடத்தில் வைத்து தூங்க வேண்டும். இவ்வாறு தினமும் செய்து வந்தால் சொத்தை பற்கள் விரைவில் குணமாகும்.

தினமும் காலை எழுந்தவுடன் வெதுவவெதுப்பான தண்ணீரில் கொஞ்சம் உப்பு சேர்த்து பற்கள் துவக்கும் முன் 1 நிமிடம் வாயி கொப்பிளிக்க வேண்டும். இவ்வாறு தினமும் மூன்று வேலை உணவு உட்கொள்ளும் முன் செய்து வந்தால் பற்களில் சொத்தையில் இருந்து விடுப்படலாம்.


3-4 பூண்டு பற்கள் எடுத்து நன்றாக தட்டி அதனுடன் 1/4 டீஸ்பூன் உப்பு சேர்த்து அந்த கலவையை சொத்தை பற்கள் மீது 10 நிமிடங்கள் வைத்து நன்றாக அழுத்த வேண்டும். இவ்வாறு தினமும் 2 முறை செய்து வந்தால் சொத்தைப் பற்களில் ஏற்படும் பாக்டீரியாக்கள் அழிக்கப்பட்டு வெளியேற்றப்படும்.

மஞ்சள் தூளை சொத்தை பல் உள்ள இடத்தில் வைத்து நன்றாக தேயித்து 5 நிமிடம் கழித்து, வெதுவெதுப்பான தண்ணீரில் வாய் கொப்பளிக்க வேண்டும். இவ்வாறு தினமும் செய்து வந்தால் விரைவில் சொத்தைப் பல் பிரச்சனை குணமாகும்.


வேப்பிலை சாறை சொத்தை பற்கள் மீது தேயித்து 10 நிமிடம் கழித்து வெதுவெதுப்பான தண்ணீரில் வாயை கொப்பளிக்க வேண்டும். முடிந்தால் தினமும் காலை வேப்பங்குச்சி கொண்டு பல்துலக்கி வந்தாலும், பற்களில் ஏற்படும் அனைத்து பிரச்சனைகளும் குணமாகும்.