இந்துக்களின் வழிபாட்டு முறையில் பிரதக்ஷணம் என்பது மிக முக்கிய பங்காற்றுகிறது. இதற்க்கு சுற்றி வருதல் என்பது எளிமையான ஒரு அர்த்தம். சமஸ்க்ரிதத்தில் “ப்ர” என்பதற்கு முன்செல்ல என்பதும் “தக்ஷணம்” என்பதற்கு வலதுபுறம் என்பதும் பொருளாகும். ஆகையால் எந்த கோவிலையும் எந்த புனிதமான இடத்தி சுற்றிவரும்போதும் வலதுபுறமாகவே சுற்றி வர வேண்டும்.

இந்துக்கள் கோவிலின் கர்பகிரஹத்தை சுற்றி வருவதுண்டு, அக்னி, அரசமரம் துளசி செடி போன்றவற்றையும் சுற்றி வருவார்கள், சில இடங்களில் மலைகளை சுற்றி வருவதும் புனிதமாக கருதப்படுகிறது. இது வெறும் நம்பிக்கை மட்டுமல்ல இது உடல் மற்றும் மன அளவில் நன்மையை அளிக்கக்கூடிய சக்தியை தர வல்லவை, ரிக் வேதத்திலும், ஸ்கந்தபுராணத்திலும் இதை பற்றி விரிவாக சொல்கிறது. பூமி அதை அடுத்துள்ள கிரஹங்கள் எல்லாம் ஒரு குறிப்பிட்ட நேர்கோட்டில் சூரியனை சுற்றியே வருகின்றன, நாம் வலது புறமாக சுற்றும்போது, பூமி சுழற்சியோடு ஏற்படும் காந்த ஆற்றல் நமக்கு நன்மை செய்வதாக அமையும்

ஸ்கந்த புராணத்தில் பிரதக்ஷணம் செய்வதால் ஏற்படும் நன்மைகள் விளக்கப்படுகிறது. முதல் அடி எடுத்த வைப்பதால் மனத்தால் செய்யும் பாவங்கள் விலகும், இரண்டாம் அடி எடுத்து வைப்பதால் பேச்சால் செய்யும் பாவங்கள் விலகும், மூன்றாம் அடி உடலால் செய்யும் பாவங்களை விலக்கும்…என்று கூறுகிறது. இந்த பிரதக்ஷணம் என்பது தெய்வங்களுக்கும் கோவில்களுக்கும் ஏற்றவாறு வேறுபடும். உதாரணமாக பிள்ளையாரை ஒரு முறை சுற்றிவர வேண்டும், சிவனை மூன்று முறை சுற்றி வர வேண்டும், விஷ்ணுவை நான்கு முறை சுற்றி வர வேண்டும்.

சுயம்பூ அகமத்தின்படி எந்த கோவிலையும் ஒரு முறை சுற்றி வந்தால் ப்ராம்ஹத்தி தோஷம் விலகும், இரு முறை சுற்றி வந்தால் உலக வாழ்வில் வெற்றிமுடியும் மனஉறுதி வரும். மேலும் 23 முறை பிரதக்ஷணம் செய்வது மிக மிக உயர்ந்த பலன்களை தருவதாக கூறுகிறது. பிரதக்ஷணம் செய்யப்படுவது பற்றி சிவன் விநாயகரையும் முருகரையும் பிரபஞ்சத்தை சுற்றி வர சொல்வது போன்ற புராணம் கதை விளக்குகிறது.

ஆதி சங்கரரை பொறுத்தவரை ஒரு வட்டம் வரையப்படவேண்டும் என்றால் அதற்கு ஒரு மைய புள்ளி வேண்டும் அது போல் இறைவனை மையப்புள்ளியாக வைத்து மொத்த பிரமாண்டமும் அவரை சுற்றி வருவதன் அடையாளமாக நாம் பிரதக்ஷணம் செய்ய வேண்டும் என்று கூறுகிறார்