ப்ரத்யங்கிரா என்பவள் அதர்வண காளி என்று அழைக்கப்படும் தேவதை ஆகும். நரசிம்மர் இரணியனை வதைத்த பிறகு அவர் கோபத்தில் இருந்து விடுபட முடியாமல் நல்லவர்களையும் வதைப்பது கண்டு சிவபெருமான் நரசிம்ம மூர்த்தியின் உக்கிரத்தை குறைப்பதற்கு பறவையும் பூதமும் மிருகமும் கலந்த ஒரு புதிய வடிவை எடுத்ததாக புராணங்கள் கூறுகின்றன அதற்கு சரபேஸ்வரர் என்று பெயர் அந்த சரபேஸ்வரரின் இறக்கையில் இருப்பவளே இந்த ப்ரத்யங்கிரா தேவி.

உலக வாழ்வில் வெற்றியடைவது மட்டும் இன்றி மோட்சத்தையும் இவள் அருள் புரிகிறாள். ப்ரத்யங்கிரா தேவி 1000 தலைகளையும் 2000 கைகளையும் கொண்டு விஸ்வரூபி. இவள் அதி அற்புத சக்திவாய்ந்தவள். ப்ரத்யங்கிரா தேவிக்கு மிளகாய் யாகம் நடத்தினால் பல்வேறு தடைகள் நீங்கும் என்பது ஐதீகம் பௌர்ணமி செவ்வாய் கிழமைகளில் ப்ரத்யங்கிரா தேவியை வணங்கினால் இழந்த புகழ் செல்வம் செல்வாக்கு போன்றவை திரும்ப கிடைக்கும், அவர்களுக்கு எதிரிகள் என்பவர்களே இருக்கா மாட்டார்கள் என்கிற நம்பிக்கை காலம் காலமாக உள்ளது.

சென்னையில் இருந்து திண்டிவனம் பாண்டிச்சேரி செல்லும் சாலையில் 500 ஆண்டுகள் பழமை வாய்ந்த ப்ரத்யங்கிரா தேவி ஆலயம் உள்ளது 72 உயரத்தில் அருள் பாலிக்கும் இந்த தேவியை வழிபட அமாவாசை பௌர்ணமி நாட்களில் கூட்டம் அலைமோதும். இங்கு நடைபெறும் மிளகாய் யாகம் மிகவும் பிரபலமானது. ப்ரத்யங்கிரா தேவிக்கு மிளகாய் யாகம் நடத்தினால் எதிரிகள் அழிவார்கள் என்பது பலரது அனுபவபூர்வமான உண்மையாகும்.

ப்ரத்யங்கிரா தேவி உக்கிரமானவள் என்றாலும் பக்தர்களுக்கு அன்பை அருள் பாலிப்பவள் ப்ரத்யங்கிரா தேவியின் மந்திரமான ” ஓம் ஹ்ரீம் யாம் கால்பயந்திநாராய கிரித்யாம் க்ரூராம் வந்துர்ரமிவே ஹராம்தாம் ப்ராம்மணாம் அவ்னிர்னுத்மா சது ” என்னும் மந்திரத்தை அதிகாலையில் குளித்து 108 மறை சொன்னால் நம்மை பாதுகாப்பாள். ப்ரத்யங்கிரா தேவிக்கு அய்யாவாடி என்னும் ஊரில் ராமாயண காலத்தில் இந்திரஜித் செய்த நிகும்பில யாகம் இன்றும் நடைபெறுகிறது, காரிய வெற்றியை தரும் இந்த யாகத்தை நடத்தி முடித்தால் ஒருவர் எல்லா தடைகளையும் தகர்த்து வெற்றி பெறுவார் என்பது நிதர்சனம்.