இருள், வெளிச்சம் இந்த இரண்டும் வெறும் ஒளி சார்ந்த விஷயங்கள் மட்டுமல்ல. ஆன்மீகத்தில் இது ஞானம் சார்ந்த விஷயம். ஒருவர் இருளில் இருப்பதென்பது புறத்தால் இருளில் இருப்பதல்ல, தன் மனதில் இருக்கும் தீவினைகளால் ஒருவர் இருளில் இருக்கிறார் என்று பொருள். விளக்கினை ஏற்றுதல் என்பது வெறும் ஒளியை பெருக்குவது மட்டுமல்ல. எப்போது ஒரு தீபம் இல்லத்தில், தொழில் இடத்தில் முறையான இடத்தில் ஏற்றப்படுகிறதோ அப்போது அதற்குரிய பலன் ஆபாரமானதாக இருக்கும். விளக்கு என்பது தேவி மஹாலஷ்மியின் அம்சம். அதனை முறையாக சரியான இடத்தில் ஏற்றுகிற போது, மஹாலஷ்மியின் அருளை நாம் பரிபூரணமாக பெற முடியும் என சாஸ்திரங்கள் சொல்கின்றன.

நோயிலிருந்து விடுபட வேண்டுமென்றால் ஒருவர் சூரியக்கடவுளுக்கு தினசரி தீபம் இட வேண்டும். உங்கள் வாழ்வில் நல்ல துணை வாழ்க்கைத்துணையாக அமைய வேண்டுமென்றால் மற்றும் திருமண வாழ்க்கை சிறக்க வேண்டுமென்றால் ராதேகிருஷ்ணாவின் படத்திற்கு முன் தீபமிட வேண்டும் தொடர்ந்து அச்சுருத்தலான கனவினால் அவதியுருகிறீர்கள் என்றால், அமைதியான உறக்கமின்றி தவித்தால் அனுமனின் மற்றொரு உருவாக கருதப்படுகிற பஞ்சமுகியின் படத்திற்கு முன்பு தீபம் இட்டால் இரவில் எந்த பதட்டமின்றி உறங்கலாம்.

பணநெருக்கடிக்கு, வீட்டின் வடப்புறத்தில் குபேரப்படத்திற்கு முன்பு தீபமிடுவது நிவர்த்தியளிப்பதாக இருக்கும். தொழில் இடங்களில் விநாயகரின் படத்தை வைத்து அதற்கு தீபமேற்றி வருவது சிறப்பானதாக இருக்கும். மேலும் தீபமேற்றுகிற போது கைகளில் படிகிற எண்ணெயை தலையிலோ, உடலிலோ அல்லது நீங்கள் அணிந்திருக்கிற உடையிலோ தேய்காதீர்கள். அது வளத்தை குறைக்கும் அடையாளமாகும். அதற்கு மாறாக தீபத்திற்கென்று ஒரு தூய்மையான சிறு துணியை வைத்து கொள்ளுங்கள்.

சில பெண்கள் தலையில் ஈரத்துண்டுடன் விளக்கினை ஏற்றுவார்கள். ஆனால் அது சரியான முறையல்ல. கடலெண்ணெய், சூரியகாந்தி எண்ணெயை விளக்கேற்றுவதற்கு தவிர்ப்பது நலம். தூய நெய்யினால் ஏற்ற முயற்சிக்கலாம். கிழக்கில் ஏற்றும் தீபம் நல்ல நலத்தை, அமைதியான மனதை தரும். வடக்கில் ஏற்றும் தீபம் பொருளாதார வளத்தை தரும், மேற்கில் ஏற்றும் தீபம் தொழில் மட்டும் தனி வாழ்கையின் கடனிலிருந்து விடுதலையையும், எதிரியை வெல்லும் தைரியத்தையும் வழங்கும். தெற்கில் தீபம் ஏற்றுவதை தவிர்பது நலம்