கணபதி வழிபாடு

இந்து மதத்தில் விநாயகரை வணங்கி விட்டுத்தான் எந்த செயலையும் தொடங்குவார்கள், அதுமட்டுமல்ல மற்ற தெய்வங்களை வணங்குவதும் கூட விநாயகரை வணங்கிவிட்டு தான் வணங்குவார்கள். விநாயகர் வழிபாட்டால் காரியத்தடைகள் விலகி வாழ்வில் இருக்கும் சிக்கல்கள் நீங்கும்.

மஹாலட்சுமி வழிபாடு

லட்சுமி வழிபட்டால் செல்வ வளம் அதிகரிக்கும், கடன் பிரச்சனைகள், தொழில் ஏற்படும் நஷ்டங்கள் எல்லாம் தீரும்.

சனீஸ்வரன் வழிபாடு.

இந்தியாவில் மகாராஷ்ட்ராவில் இருக்கும் சனி ஷிக்னப்பூர் சனி வழிபாட்டிற்கு மிகவும் பிரசித்தி பெற்றது. இங்கு சுயம்புவாக இருக்கும் சனியின் மீது எண்ணெய் ஊற்றி வழிபட்டால் சனியால் ஏற்படும் பாதிப்புகள் தோஷங்கள் நீங்கும் நமது கர்மா வினைகள் அழியும் என்பது ஐதீகம்

பிரிதிவி சிவலிங்க பூஜை

இந்த பூஜை மண்ணால் ஆன சிவ லிங்கத்திற்கு செய்யப்படுவது. கங்கை ஆற்றங்கரையில் 108 பிரிதிவி சிவலிங்கங்கள் இருக்கின்றன, இதற்கு மக்கள் அவர்கள் பெயரில் அபிஷேகம் செய்யலாம். இந்த வழிபாடு மிக சக்தி வாய்ந்தது. இந்த வழிபாடு கண் திருஷ்டி, விபத்துகள், நஷ்டங்கள் போன்றவற்றை நீக்கி வாழ்வை வளமாக்க உதவும்.

காலசர்ப்ப தோஷ நிவாரண வழிபாடு

இந்த வழிபாடு சர்ப்ப தோஷமுள்ளவர்கள் செய்ய வேண்டும். இந்த தோஷமுள்ளவர்கள் வாழ்நாளில் பெரும் துயரத்திற்கு உள்ளவர்கள். காளஹஸ்தி போன்ற கோயில்களில் இது போன்ற தோஷங்களுக்கு சிறந்த பரிகார தலமாக விளங்குகிறது.

மகா ம்ருத்யுஞ்ஜெய மந்திரத்தை ஜெபித்தல்

இந்த ஜபம் சிவனை குறித்து, இந்த ஜபம் நமக்கு பாதுகாப்பை அளித்து ஒரு கவசம் போல் விளங்கும். ஆயுள் நீடிக்கும், தீய சக்திகள் விலகும்

சத்தியநாராயணா பூஜை

இந்த பூஜை பிரத்யேகமாக குழந்தை இல்லாதவர்கள் செய்யக்கூடியது. இந்த பூஜை உடல் மற்றும் மனதிற்கு அபிரிமிதமான பலன்களை அளிக்க கூடியது. இந்த பூஜை மஹாவிஷ்ணுவை முன்னிறுத்தி செய்யப்படுவது.

ஹனுமான் பூஜை

ஹனுமான் சிவனின் அவதாரமாக கருதப்படுவார். இவர் ராமனின் தீவிர பக்தனாதலால் ராமனின் அருளும் ஒருவருக்கு இவரால் கிடைக்கும். ஹனுமான் பக்தனான துளசி தாசர் எழுதிய ஹனுமான் சாலீஸாவை தினமும் அதிகாலை படித்து வருவது இல்லத்தில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி, மனதில் உள்ள தேவையற்ற பயத்தை அகற்றும்.