பூமியானது அதை சுற்றி உள்ள சூரிய குடும்பத்தை சார்ந்த நட்சத்திரங்கள் மற்றும் கிரஹங்களின் ஆதிக்கத்தில் தான் உள்ளது . கிரஹங்கள் மற்றும் நட்சத்திரங்களின் ஆற்றலை பூமியில் உள்ள கனிமங்கள் செடி மரங்கள் மற்றும் கற்கள் கிரகிக்கும் தன்மை கொண்டுள்ளன. ஒவ்வொரு ராசிக்கும் ஒவ்வொரு கற்கள் பிரத்தேயகமாக இருக்கின்றன அவற்றை ஜோதிடரின் தகுந்த ஆலோசனையுடன் அணிந்தால் நம் பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம்.

செவ்வாயின் அதிகம் உடைய மேஷம் விருச்சகம் ரசிகர்கள் பவளம் அணிந்தால் தொழில் வெற்றி மற்றும் வாழ்வில் மேன்மை அடையலாம், சூரியனின் அதிகம் உடைய சிம்ம ராசிக்காரர்கள் மாணிக்கம் அணியலாம். புதனின் ஆதிக்கத்தை உடைய மிதுனம் மற்றும் கன்னி ராசி காரர்கள் மரகதத்தை அணியலாம் இதன் மூலம் அவர்கள் பேச்சாற்றல் அதிகமாகும, குருவின் ஆதிக்கத்தை உடைய தனுசு மற்றும் மீனா ராசிக்காரர்கள் கனக புஷ்பராகத்தை அணியலாம், சனியின் ஆதிக்கத்தை உடைய கும்பம் மற்றும் மகர ராசிக்காரர்கள் நீலக்கல் அணியலாம் சுக்ரனின் ஆதிக்கத்தை உடைய ரிஷபம் மற்றும் துலா ராசிக்காரர்கள் வைரத்தை அணியலாம்.

பொதுவாக கற்கள் என்றாலே அதிர்ஷ்டத்தை தரக்கூடியதுதான் அனால் எந்த ராசிக்கு எந்த கிரகம் ஆதிக்கம் உள்ளவர்களுக்கு எந்த கல் பொருந்தும் என்று ஜோதிட ரீதியாக ஆய்வு செய்து அதற்குரிய கற்களை சரியான விரலில் அணிய வேண்டும் இல்லை என்றால் பலன் மாறிப்போய் ஆபத்தில் முடிந்து விடும்.. ராசி நட்சத்திரம் லக்கினம் கை ரேகையை பார்த்துகூட ரசிகர்களை தேர்ந்தெடுக்க முடியும். கற்களை தவறாக அணிந்தால் மரணம் கூட சம்பவிக்கலாம் என்பதால் ராசி கற்கள் தேர்ந்தெடுப்பதில் அதிக கவனத்துடன் இருக்க வேண்டும். பிறந்த தேதியின் ஆதிக்கத்தை கொண்டும் கற்களை தேர்வு செய்யலாம். கடக ராசியில் பிறந்தவர்கள் முத்து கற்களை பயன்படுத்தலாம்.

மோதிரங்களை எப்போதும் நான்காவது விரலில் தான் அணிய வேண்டும் அதன் பெயரே மோதிர விரல். இந்த விரல் பூமிக்குரியது. ஆனால் பரிகாரம் செய்பவர்கள் கற்களுக்கேற்ற விரல்களை தேர்ந்தெடுத்து அணியலாம். முத்து மற்றும் புஷ்பராகம் போன்ற கற்களை ஆட்காட்டி விரலில் அணியலாம், கோமேதகம் மற்றும் வெள்ளி ஆகியவற்றை நடுவிரலில் அணியலாம். மரகதத்தை சுண்டு விரலில் அணியலாம்