குபேர வழிபாடு

குபேரன் ராவணின் சகோதரன். இலங்கையை இராவணன் ஆட்சி செய்வதற்கு முன்பு குபேரனே இலங்கையின் அதிபதியான இருந்தான். யக்ஷ குலத்தை சேர்ந்தவனாகிய குபேரன் செல்வத்தின் அதிபதியாக போற்றப்படுகிறான். குபேரன் லஷ்மி தேவியிடத்தில் இருந்து மாறுபட்டவர் இருவருமே செல்வத்திற்கான அதிபதிதான் என்றாலும் லஷ்மி விஷ்ணுவின் அம்சமாக இருப்பவள் குபேரன் ஒரு யக்ஷனாக இருந்து சிவபெருமான் அருளால் செல்வத்தின் அதிபதியாக உயர்ந்தவன். லஷ்மி மங்களகரமான அதிர்ஷ்டமே உருவானவள், குபேரன் செல்வ செழிப்பே உருவானவன். குபேரனை எந்திரத்தின் மூலமே வழிபட வேண்டும். செம்பு தகட்டில் அல்லது தங்கம் அல்லது வெள்ளி தகட்டில் ஒன்பது கட்டங்கள் வரைந்து அதில் 72 என்கிற கூட்டு எண் வருமாறு ஒன்பது கட்டங்களிலும் எண்களை நிரப்ப வேண்டும் இதற்கு பால் பன்னிர் பூக்கள் போன்றவை அர்ப்பணித்து தொடர்ந்து 72 நாட்கள் பூஜை செய்து வர வேண்டும். குபேர வழிபாட்டின் போது குபேரனுக்கான மந்திரத்தை சொல்ல வேண்டும்

“ஓம் யக்ஷ்ய குபேராய வைஸ்ரவணாய, தான தான்யாதிபதியே தன தான்ய ஸம்ருத்திமே தேஹி தபாயஸ்வாஹா ” என்கிற மந்திரத்தை எந்திரம் வைத்து பூஜை செய்து 108 முறை 72 நாட்கள் தொடர்ந்து செய்து வந்தால் உடனடியாக பலன்கள் கிடைக்கும். இந்த பூஜையை வெள்ளி அல்லது செவ்வாய் கிழமைகளில் தொடங்க வேண்டும். கிழக்கு பார்த்து அமர்ந்து பூஜை செய்ய வேண்டும் பூஜை தொடங்கும் நாள் அமாவாசையாக இருத்தல் நல்லது. குபேரன் பாதாள லோகத்தில் வசிப்பவர் அதனால் மறைந்திருக்கும் செல்வங்கள் நம்மை தேடி வர இவரை வழிபடலாம். குபேரனின் உருவம் குள்ளமாக உடல் பெருத்த உருவமாக இருக்கும் இந்த இவரின் தோற்றத்தின் மீது மனம் வைத்து த்யானம் செய்வதால் செல்வம் சேர்க்கும் மன உறுதி அதிகரிக்கும். இந்திய மட்டுமல்லாது இவரின் இந்த உருவத்தை சீன மலேசிய, தைவான், சிங்கப்பூர் போன்ற நாடுகளில் வழிபடுகிறார்கள்

குபேரன் மூலாதார சக்கரத்தை ஆட்சி செய்கிறவர். மூலாதாரம் ஒருவருக்கு சரியாக இயங்கினால் பூமி சார்ந்த செல்வம் மற்றும் நன்மைகள் அதிகமாக வரும் குபேரனின் திசை வடக்கு. பூகோள அறிவியலின் படி அதிகமான காந்த சக்தி வடக்கு திசையில் தான் இருக்கிறது. வியாபாரத்திற்கு இது சிறந்த இடமாகும் இதை குபேர மூலை என்று சொல்கிறார்கள். குபேரனை இதுபோன்று வாஸ்து முறைகளிலும், மற்றும் பிரத்யேக த்யான வழிபாடு முறையிலும் தவறாமல் வழிபட்டு வருபவர்களுக்கு குபேரன் செல்வ செழிப்பை நிச்சயம் தருவார்