விளக்கு ஏற்றுவது என்பது கடவுள் வழிபாட்டில் ஒரு எளிமையான வழி. விளக்கு இல்லாத கடவுள் வழிபாடு முழுமை அற்றதாக கருதப்படுகிறது. இந்த விளக்கு ஏற்றுவதில் நிறைய விதிமுறைகள் உள்ளன அவற்றை முறையாக வியாதிகளில் இருந்து விடுதலை யாக வேண்டும் என்றால், எப்போதும் ஆரோக்யமாக வாழ வேண்டும் என்றால் சூர்ய பகவான் முன்பு விளக்கு ஏற்ற வேண்டும். திருமணமாகாதவர்கள் கிருஷ்ணன் ராதா வின் படத்திற்கு முன்பு விளக்கேற்றினால் திருமணம் நடைபெறும்.

பயம் ஏற்படாமல் இருக்க இரவில் நல்ல தூக்கம் வர பஞ்சமுக ஆஞ்சநேயர் முன்பாக விளக்கேற்ற வேண்டும். தொழில் முன்னேற்றம் மற்றும் பண வரவு வர வேண்டும் என்றால், வீட்டின் வடக்கு பக்கத்தில் குபேரன் படம் முன்பு விளக்கு ஏற்றி வர வேண்டும், அப்படி செய்யதால் பொருளாதார முன்னேற்றம் நிச்சயம் உண்டு. எல்லாவற்றையும் விட முக்கியமாக வீட்டிலும் வேலை செய்ய்யும் இடத்திலும் நம் வேலைகளை தொடங்கும் முன்பதாக விநாயகர் படத்தை வைத்து விளக்கு ஏற்றி தொடங்கினாள் எடுத்த காரியத்தில் வெற்றி கிடைக்கும். ராமர் பட்டாபிஷேக படத்திற்கு முன்பு விளக்கேற்றுவது சகல நன்மைகளையும் தரும்…

விளக்கு ஏற்றும் போது கைகளில் படும் எண்ணையை உடையிலோ தலையிலோ தேய்க்க கூடாது அது செல்வா நாசத்திற்கு வழி வகுக்கும். மாறாக அதை துடைப்பதெற்கென்றால் தனியாக ஒரு துணியை வைக்க வேண்டும். விளக்கு ஏற்றும் எண்ணெய்க்கு அதனதன் தன்மையை பொறுத்து பலன் மாறுபடும், பொதுவாக நெய்யில் கடுகு எண்ணெயிலும் தான் விளக்கேற்றவேண்டும். வடக்கு நோக்கிய திசையில் விளக்கேற்றுவது அதிக நன்மையை தரும், மேற்கு நோக்கி விளக்கேற்றினால் கடன் தொல்லை மற்றும் எதிரிகள் தொல்லை அகலும், கிழக்கு நோக்கி விளக்கேற்றினால் நோயற்ற வாழ்வு கிடைக்கும்.

தெற்கு நோக்கி மட்டும் எக்காரணத்தை கொண்டும் விளக்கு ஏற்ற முடியாது. வேலையில் முனைப்பு இல்லாத தன்மை மற்றும் மனா உறுதி இல்லாத நிலை இருந்தால் வெள்ளி கிழமைகளில் துர்கை முன்பு வேலைக்கு ஏற்ற வேண்டும், வேலை செய்ய்ய்ம் இடத்தில தொடர்ந்து பிரச்னை ஏற்பட்டால் விநாயகர் முன்பு தேங்காய் வைத்து விளக்கு ஏற்ற வேண்டும். முன்ஜென்மத்தில் செய்த பாவங்கள் தற்போதய வாழ்வின் பாவங்கள் நீங்க வேண்டுமென்றால் சிவனின் முன்பாக நெய்யில் விளக்கு என்ற வேண்டும்