பூசலார் என்றொரு மிகப்பெரிய சிவ பக்தர் இருந்தார். அவர் சிவனுக்காக ஒரு ஆலயம் எழுப்ப வேண்டும் என்று நினைத்திருந்தார். ஆனால் ஒரு சிவனடியாராக இருந்0ததைத் தவிர அவருக்கு ஒரு ஆலயம் எழுப்புவதற்கான எந்த ஒரு பொருளாதார வசதிகளும் இல்லை அவர் எப்போதும் ஒரு மரத்தடியில் அமர்ந்து கொண்டு கந்தலான ஆடைகளையே அணிந்திருப்பார் உணவைக்கூட யாசகம் வாங்கியே உண்டு வந்த அவர், சிவனுக்கு கோயில் எழுப்பும் எண்ணத்தை மட்டும் இடைவிடாமல் நினைத்து வந்தார்.

ஒரு கோயிலை நிர்மாணிப்பதற்கு முன்பு பல தகவல்களையும் விதிமுறைகளையும் தெரிந்துகொள்ளவேண்டும் தென்னிந்திய கோயில்களை பொறுத்தவரை நிறைய விதிமுறைகள் இருக்கின்றன. அந்த விதிமுறைகளை ஒட்டியே கோயில்களைக் கட்ட வேண்டும். இந்த விதிமுறைகளை தெரிந்து கொள்வதற்காக பல மைல் தூரம் நடந்து பல கோயில்களுக்கு சென்றார். பலரிடம் சென்று பல விதிமுறைகளை கற்றுக்கொண்டார். பிறகு தன் மனதாலேயே கோயிலை நிர்மாணித்து கோபுரத்தை வடிவமைத்தவர்.

தன் மனக் கண் முன் கோபுரம் எப்படி இருக்க வேண்டும் என்பதை கற்பனை செய்து அதன் பின்பு அதை ஏற்படுத்தினார். அந்த கோபுரம் எந்த திசையை நோக்கி இருக்க வேண்டும் என்பதை தீர்மானித்த பிறகு கோவிலின் உட்பகுதி, அதில் உள்ள சிலைகள், மூலவர் விக்கிரகம், அந்த விக்ரகம் எப்படி இருக்க வேண்டும்? அதன் அளவு என்ன? எடை என்ன? என்பதை கொண்ட தன் மனக் கண்ணாலே அளவிட்டு முடிவு செய்தார்.

பூசலார் இந்த கோயில் கட்டுவதற்கு உபகரணங்களையும் கற்களையும் தேடி அலைந்தார் பூசலார். ஆனால் நிஜமான கோவிலுக்கு எந்தப் பணியையும் துவங்குவதற்கு முன்பாகவே மனதாலேயே ஒரு கோவிலை அங்குலம் அங்குலமாக எழுப்பி அதற்கு குடமுழக்கு செய்யவும் நாள் குறித்தார்.

அதேநேரத்தில் பல்லவ ராஜசிம்மன் காஞ்சிபுரத்தில் இதேபோன்ற கோயிலைக் கட்டத் தொடங்கி பிரமாண்டமான முறையில் கட்டி முடித்திருந்தார். அந்தக் கோயிலுக்கும் கும்பாபிஷேகத்திற்கான நாள் குறிக்கப் பட்டிருந்தது. ஒருநாள் இரவு அந்த மன்னனின் கனவில் ஈசன் வந்து உன் கோயிலுக்கான கும்பாபிஷேக தேதியை மாற்றிக்கொள் அந்த நாளில் இதைவிட அற்புதமான கோயிலில் கும்பாபிஷேகம் நடக்கிறது, நான் அங்கு இருக்க வேண்டும் என்று கூறி மறைந்தார்.

இதனால் பேரார்வம் கொண்ட மன்னன் அந்த கோவிலை தேடி நாடெங்கும் அலைந்தான். அப்போது ஒரு மரத்தடியில் ஒரு சிவனடியார் நைந்து போன ஆடையுடன் அமர்ந்திருந்ததையும் அவர் முகத்தில் ஒளிப் பிரவாகம் வீசுவதையும் பார்த்து அவர் எதிரில் சென்று அமர்ந்தார். அப்போது சிறிது நேரம் கழித்து கண்விழித்த பூசலார் தன் எதிரில் அமர்ந்து இருப்பவரைப் பார்த்து என்ன வேண்டும் என்று கேட்டபோது அந்த மன்னன் “தான் கட்டிய உள்ள கோயிலை விட மிகப் பெரிய அழகான ஒரு கோயில் கட்டப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற இருப்பதாகவும், அது எங்கே என்று தேடிக் கொண்டிருப்பதாகவும் கூறினார் ” அதை கேட்டு சிரித்த பூசலார் தன் மனதாலேயே அப்படி ஒரு கோயிலை நிர்மாணித்திருப்பதாக அவரிடம் கூறினார்.

அதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த மன்னன் பூசலாரின் பக்தியையும் பெருமையையும் கண்டு வணங்கினான். இறைவன் என்றுமே வெளிப்புறத் தோற்றத்தில் மயங்குவதில்லை, இதயபூர்வமான அன்பையெஎ விரும்புகிறார் என்பதே உண்மை.