சென்னையின் மைய பகுதியில் திருவல்லிக்கேணியில் அமைந்துள்ள பார்த்தசாரதி பெருமாள் கோயில் 61 ஆவது திவ்ய தேசமாக போற்றப்படுகிறது . பஞ்சமுர்த்தி தலமான இதில் வேங்கட கிருஷ்ணர், யோக நரசிம்மர், ரங்கநாதர், ராமபிரான், கஜேந்திர வரதர் என்று ஐந்து சந்நிதிகளும் பிராதனமாக உள்ளன ஆகையால் திருப்பதி அகோபிலம் ஸ்ரீரங்கம் அயோத்தி ஆகிய ஐந்து வைணவ திருத்தளங்களில் உள்ள பெருமாளை ஒரே கோயிலில் தரிசிக்கும் சிறப்பு இக் கோயிலுக்கு உண்டு .

முன்னொறு காலத்தில் தொண்டை மண்டலத்தை ஆண்ட சுமதி என்ற மன்னன் திருவேங்கடமுடையான் மீது பெரும் பக்தி கொண்டிருந்தான் . அவனுக்கு பெருமாளை மகாபாரத போரில் அர்ஜூனனுக்கு தோரோட்டியாக இருந்த கிருஷ்ணன் ரூபத்தில் பார்க்க வேண்டும் என ஆவல் கொண்டு மனமுறுகி வேண்டினான் . அதன்படி அவன் கனவில் தோன்றிய வேங்கடேச பெருமாள் துளசி காடு ( திருவல்லிக்கேணி) சென்றால் உன் விருப்பம் நிறைவேறும் என்று கூறினார் . அதன்படி துளசிக்காடு வந்த மன்னனுக்கு பாரதப் போரில் தேரோட்டிய கிருஷ்ணனாக காட்சி கொடுத்தார் வேங்கடவன் . அதனால் இந்த கோயில் மூலவருக்கு வேங்கட கிருஷ்ணன் என்றே பெயர் .

ஆனால் உற்சவர் பெயராகிய பார்த்த சாரதி பெயரிலேயே இக்கோயில் அழைக்க படுகிறது . இங்கு உற்சவர் முகத்தில் நிறைய வடுக்கள் காணப்படுகின்றன பாரதப் போரில் பீஷ்மர் எய்த கணைகளை தன் முகத்தில் பட்டதாலேயே இந்த தழும்புகள் இருப்பதாக கூறப்படு கிறது . இந்த வடுக்கள் நீங்க வேண்டும் என்பதற்காகவே நிவேதனத்தில் நெய் அதிகம் சேர்க்படுகிறது . வேறு எங்கும் இல்லாதவாறு இங்கு பெருமாள் பெரிய மீசையுடன் கான படுகிறார் . இது போல் வேறு எங்கும் காண முடியாது .

இவர் மிரட்டும் விழிகளோடு வலது கரத்தில் சங்கும் இடுப்பில் கத்தியும் கொண்டு சாலக்கரம மாலை அணிந்து ஆதிசேஷன் மீது நின்றவாறு காட்சி தருகிறார் . வேறு எந்த வைணவ தலத்திலும் இல்லாதவாறு இங்கு கண்ணன் ருக்மணி தேவி மற்றும் பலராமரோடு காட்சி தருகிரார் , இவர்களோடு தம்பி சாத்யாகியும் மகன் பிரத்யும்னனும் பேரன் அநிருத்தனும் சேர்த்து குடும்ப சமேதராக உள்ளார் . இந்த கண்ணன் பக்தர்களுக்கு பெரும் ஐஸ்வர்யமும் குழந்தை பேரும் அருள்வதாக நம்புகின்றனர் . கிழக்கு நோக்கியிருக்கும் இந்த கோயில் ஐந்து நிலைகளும் 7 கலசங்களுடன் கம்பீரமாக காட்சி தருகிறது . ஆழ்வார்களான பேயாழ்வார் , திருமங்கை ஆழ்வார் மற்றும் திருமழிசை ஆழ்வார் ஆகியோர் வணங்கிய தலமாகும்.