இந்தியாவில் கோயில்கள் வழிபாட்டு தலங்களாக மட்டும் இருப்பதில்லை கோயில்கள் கலாச்சாரத்தையும், பண்பாட்டையும், கலாச்சாரம் சார்ந்த நிகழ்வுகளையும் பிரதிபலிக்கும் இடமாக இருக்கிறது. இந்தியாவில் கோயில்கள் பொதுவாகவே மக்கள் சந்திக்கும் இடமாகவும் இருக்கிறது. திருமண விஷயமாக இருந்தாலும் சரி, நண்பர்கள் சந்திப்பதாக இருந்தாலும் சரி, சுப காரியங்களாக இருந்தாலும் சரி எல்லாமுமே கோயில் வளாகத்தில் தான் நடைபெறுகின்றன.

கோயில்கள் இந்திய மக்களின் உணர்வுகளோடு பின்னிப் பிணைந்தது. இந்தக் கோயில்கள் குரு சிஷ்ய பாரம்பரியத்தை காப்பாற்ற வேண்டிய அவசியத்தில் இருக்கிறது . கோயிலில் இருக்கின்ற விக்கிரகங்களையும் விட அந்த விக்ரகங்களுக்கு எல்லாக் காலங்களிலும் பூஜை செய்கின்றவர்கள் அந்தக் கோயிலின் நித்தியத்தை காப்பாற்றுபவர்களாக இருக்கின்றனர். அந்தக் காலங்களில் இவர்களைப் போன்ற இறையடியார்கள் குருவாக இருந்து மக்களை வழி நடத்தினார்கள்..

கோயில்களில் அனுதினமும் இறைவனுக்குத் தொண்டு செய்யும் இவர்களின் அருகாமை மக்களுக்கு அருளை தரும்.. ஒரு முறை நாரதர் விஷ்ணுவிடம் சென்று குரு-சிஷ்ய உறவு பற்றி கேட்டார், அதற்கு விஷ்ணு ‘பூமியில் ஒரு புழு பிறந்திருக்கிறது அதனிடம் சென்று கேள் ” என்று சொன்னார். நாரதர் அந்தக் புழுவிடம் சென்று கேட்டபோது அந்தப் புழு இறந்துபோனது. பிறகு மீண்டும் அவர் விஷ்ணுவிடம் சென்று இதைச் சொன்னபோது, “அவர் பூமியில் ஒரு பசு பிறந்திருக்கிறது அதனிடம் சென்று கேள்” என்றார்.

பிறகு நாரதர் அதேபோல் அந்தப் பசுவிடம் சென்று கேட்டபோது அந்த பசு இறந்துபோனது. குழப்பமடைந்த நாரதர் மீண்டும் விஷ்ணுவிடம் சென்று நடந்தவற்றையெல்லாம் சொன்னார். அதற்கு விஷ்ணு பூமியில் . “ஒரு குழந்தை பிறந்திருக்கிறது அதனிடம் சென்று கேள்” என்று மீண்டும் சொன்னார்.

நாரதர் மீண்டும் பூலோகம் வந்து அந்த குழந்தையிடம் சென்று கேட்டார் அதற்கு அந்த குழந்தை “இதற்கு முன் நீர் பார்த்த புழுவும் பசுவும் நான்தான்” உங்கள் அருகாமை என் கர்மவினையை எரித்து என்னை மனிதப் பிறவி எடுக்க வைத்திருக்கிறது என்று சொன்னது.. உயர்நிலையை அடைந்த இறையடியார்கள் அருகாமை அத்தனை சிறப்பு வாய்ந்தது . ஒரு காலத்தில் இதைப்போன்ற இறையடியார்கள் கோயில்களை நிர்வகித்தார் கள் இவர்களே மக்களை வழி நடத்துபவர்களாகவும் இருந்தார்கள்… மலையாளத்தில் இவர்களுக்கு தந்திரி என்ற பெயரும் உண்டு இதன் அர்த்தமே தீர்த்து வைப்பவர் என்று பொருள்.