கரூர் மாவட்டம் குளித்தலை அருகே அமைந்துள்ளது லாலாபேட்டை என்கிற கிராமம் . காவிரி ஆற்றங்கரையில் அமைந்துள்ள இந்த கிராமத்தில் தான் ஆஞ்சநேயர் கல் மூலம் உத்தரவு தரும் அதிசய கோயில் அமைந்துள்ளது. இந்த கோயில் இங்கு அமைத்த விதமே ஆச்சர்யமானது . சுமார் 350 ஆண்டுகளுக்கு முன்பு இந்த பகுதியில் விஜயநகர மன்னர்கள் கட்டிய பெருமாள் கோயில் இருந்தது. நூற்றுக்கணக்கான பக்தர்கள் தினம் தினம் இங்கு வந்து பிரத்தனை மற்றும் நேர்த்தி கடன்களை நிறைவேற்றுவதுண்டு.

காவிரி ஆற்றங்கரையில் அமைந்திருப்பதால் வெள்ளம் வரும் போது யாரும் கோயிலின் அருகே செல்ல முடியாத சூழல் ஏற்பட்டது . அதனால் மக்கள் காவிரி ஆற்றின் அந்தப்புரத்திற்கு கோயிலை மாற்ற எண்ணம் கொண்டு செயல்பட்டார்கள் . கோயிலை கல்லா பள்ளி எனும் இடத்திற்கு மாற்ற எல்லா வேலைகளும் நடந்து கொண்டிருந்தது . அநேகமாக எல்லாவற்றையும் மாற்றியாகிவிட்டது . கொடிமரம் மட்டும் எஞ்சி யிருந்தது . பாராங்கல்லால் ஆன கொடிமரம் என்பதால் எளிதில் பெயர்த்து எடுக்க முடியவில்லை. அதனால் அதை சுற்றி குழி தோண்ட முடிவு செய்தனர் . குழி தோண்டிய போது ரத்தம் போன்ற திரவம் வந்ததால் பயந்து நிறுத்தி விட்டனர். அன்றிரவு ஒருவரின் கனவில் வந்த ஆஞ்சநேயர் கொடிமரத்தின் கீழ் குடியிருப்பதாகவும் தனக்கு கோயில் எழுப்பு மாறும் கூறினார் .

பிறகு ஊர் மக்கள் கொடி மரத்தின் அடியிலேயே ஆஞ்சநேயரை பிரதிஷ்டை செய்தனர் . சில நாட்களில் கருவறையும் கட்ட பட்டது . 1940 ல் இக்கோயில் கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. இந்த கோயிலில் இருக்கும் தட்டையான வட்ட கல் மூலமாக ஆஞ்சநேயர் பக்தர்களுக்கு உத்தரவு தருகிறார் . ஆஞ்சநேயர் சஞ்சிவி மலையை தூக்கி சென்ற போது அதிலிருந்த விழுந்த கல்லாக இதை கருதுகிறார்கள் . பக்தர்கள் இங்குள்ள கிணற்றில் குளித்து முடித்து விட்டு ஈர உடையுடன் இந்த கல்லின் மீது அமர்ந்து தங்கள் கோரிக்கைகளை ஆஞ்சநேயரிடம் வைத்து வேண்டி கொண்டு ஒரு கையால் பூமியை தொடுகிறார்கள். அப்போது இந்த கல் சுழல ஆரம்பிக்கிறது . பக்தர்கள் நினைத்த காரியத்திற்கு அனுமன் ஆசிகள் உண்டென்றால் வலப்புறமாகவும் , இல்லையென்றால் இப்புறமாகவும் கல் சுழலுகிறது . பூமியில் இருந்து கையை எடுக்காமல் பக்கத்தரும் சேர்ந்த்து சுழல்கிறார். பக்தரின் கோரிக்கை நியாயமற்றதாக இருந்தால் கல் எந்த அசைவும் இன்றி அப்படியே நிற்கிறது .

ஏகாதேசி , அமாவாசை பெளர்ணமி , வியாழன் , சனி , ஞாயிறு கிழமைகள் மட்டும் இந்த பிராத்தனை செய்யப்படுகிறது ..