ம் தஞ்சாவூர் அருகே உள்ளது திருமாந்துறை அட்சய நாத சுவாமி கோயில் . இங்குள்ள சந்திர கிணறு தீர்த்தத்தில் குளித்து காலமாமுனிவரும் நவகிரஹங்களும் ரோக நிவர்த்தி அடைந்ததாக தல புராணம் கூறுகிறது . முகப்பு ராஜ கோபுரம் இந்த கோயிலில் இல்லை . இந்த கோயிலில் உள்ள இறைவியின் பெயர் ஸ்ரீ யோகநாயகி . கருவறையில் தட்ஷிணாமுர்த்தி பிரம்மா துர்கை ஆகியோர் உள்ளனர் . இப்பிரகாரத்தில் விநாயகர் மனைவியுடன் காட்சி அளிப்பது சிறப்பம்சமாகும். உட்பிரகாரத்தில் நால்வர் சன்னிதி உள்ளது . திருக்கஞ்சனூர் சப்த்த ஸ்தானத்தில் உள்ள ஏழு தலங்களில் இதுவும் ஒன்றாகும்.

தட்ஷன் நடத்திய யாகத்தில் சிவனின் விருப்பத்தை மீறி கலந்து கொண்டதால் ஷய ரோகத்தால் பாதிக்கப்பட்டார். உடனே சந்திரன் தன் குருவிடம் சென்று பரிகாரம் கேட்க இதற்கு பரிகரமாக மாந்துறை என்கிற இந்த தலத்தில் அட்சய நாத சுவாமியை வழிபட கூறினார் அதே போல் சந்திரன் இங்கு வந்து வழிபட்டு சாப விமோசம் பெற்றதாக புராணம் கூறுகிறது . இன்றும் இத்தலத்தில் உள்ள இறைவனை சந்திரன் தினமும் வழிபடுவதாக நம்பப்படுகிறது . ஜாதக ரீதியாக சந்திரன் உச்சம் நீசம் சத்ரு மற்றும் ரோக ஸ்தானத்தில் இருக்க பெற்றவர்கள் வணங்க வேண்டிய தலம் இது .

ரோகிணி திருவோணம் மற்றும் கடக ராசிக்காரர்கள் இந்த தலத்தில் வழிபாடு செய்யலாம் . சந்திர தோஷத்திற்கு பரிகார தலமாக விளங்கும் இக்கோவிலில் வழிபட்டால் விவசாயம் மற்றும் நீர் வளம் போன்றவையும் மேலோங்கும். ஒரு முறை தேவ லோகத்தில் ஏற்பட்ட பஞ்சத்தை தீர்க்க இந்திரனும் வருணனும் இந்த தலத்தில் வழிபட்டு பரிகாரம் செய்தார்கள் . எனவே இந்த தலத்தில் வழிபட்டால் விவசாயம் செழிக்கும் .

பஞ்சாங்கத்தில் குறிப்பிட்டுள்ள வாஸ்து நாள் கீழ் நோக்கு நாள் மற்றும் ஏர் கலப்பை பிடிக்க உகந்த நாள் போன்ற நாட்களில் கலப்பை மற்றும் விவசாய பொருட்களுக்கு மஞ்சள் குங்குமம் மற்றும் சந்தனம் வைத்து பூஜை செய்து விவசாயம் தொடங்குவது வழக்கமாக உள்ளது . சந்திரன் நீர் ராசி , இந்த தலமும் சந்திரன் சம்பந்தப்பட்டது அதன் தாக்கம் இந்த கோவிலில் காண முடிகிறது எப்படி என்றால் கோயிலின் சந்திர கிணற்றில் வளர்பிறையில் நீர் பொங்கி பெருகுகிறது தேய்பிறையில் குறைகிறது. இந்த அதிசயம் இங்கு தவறாமல் நடக்கிறது . கும்பகோணம் மைலாடுதுறை சாலையில் திருப்பந்தாள் செல்லும் வழியில் சூரியனார் கோயிலுக்கு அருகில் உளளது .