ஆந்திர மாநிலம் அனந்த்பூர் வட்டத்தில் உள்ளது லேபக்‌ஷி எனும் சிறிய கிராமம் . இது பெங்களுரில் இருந்து சுமார் 120 கி.மி தொலைவில் அமைந்துள்ளது . அகத்தியரால் கட்டப்பட்டதாக சொல்லப்படும் இக் கோயிலில் நிறைய அதிசயங்கள் நிறைந்துள்ளன . ராமாயணத்தில் வரும் ஜடாயு மோட்ச சம்பவம் இந்த இடத்தில் நடந்ததாக நம்பப்படுகிறது. இங்கு சிவன் விஷ்ணு வீரபத்ரர் ஆகியோருக்கு கோயில்கள் உள்ளன . இங்கு உள்ள வீரபத்ரர் கோயிலில் உள்ள தூண் அந்தரத்தில் பூமியை தொடாதவாறு இருப்பது ஒரு அதிசயமாகும் .

விஜய நகர மன்னர்கள் ஆட்சி காலத்தில் மெருகேற்றப்பட்ட கலை வடிவங்கள் இக் கோயிலில் உருவாக்கப்பட்டன. இக்கோயிலின் ஒவ்வொரு தூணிலும் ஆச்சர்யமான சிற்ப வேலைபாடுகள் பிரம்பிக்கதக்க வகையில் உள்ளன. இந்தியாவிலேயே உயரமான நந்தி இங்கு தான் உள்ளது . சுமார் 70 தூண்கள் உள்ள இக்கோயிலில் 7 தலையுடன் உள்ள நாகத்தின் குடையில் கீழ் இருக்கும் லிங்கம் எல்லோரையும் கவரும் வகையில் உள்ளது.

இந்த நாக சிற்பத்தை பற்றி சுவாரஸ்யமான ஒரு கதை உள்ளது . ஆதாவது இந்த சிலையை செதுக்கிய சிற்பி, காலையில் தன் தாயிடம் உணவு சமைக்குமாறு பணித்து விட்டு இந்த சிலையை செதுக்க ஆரம்பித்து பின் மதியம் சமைத்து முடிப்பதற்குள் அந்த சிலையை செதுக்கி விட்டதாக சொல்கிறார்கள். இது ஒரே கல்லில் செதுக்கப்பட்ட சிலையாகும் . இன்றும் ஜடாயு காயம் பட்டு விழுந்த இடம் பாதுகாக்கப்பட்டு வருகிறது . சிவனின் 14 வடிவங்கள் இந்தியாவிலேயே இந்த கோயிலில் தான் இருக்கிறது . மேலும் இங்கு கற்களாலேயே செதுக்கப்பட்ட சங்கிலி இங்கு வருபவர்களின் கவனத்தை வெகுவாக ஈர்க்கிறது .

இந்தியாவில் சிற்ப வேலைபாடுகளுக்கு பெயர் போன கோயில்கள் பல இருந்தாலும் இந்த லேபட்சி கோயில் மிக மிக ஆச்சர்யபடும் வகையில் அமைந்துள்ளது . 19 நூற்றாண்டை சேர்ந்த பிரிடிஷ் பொறியாளர் இங்கு பூமியில் படாமல் இருக்கும் தொங்கும் தூணை பூமியில் பதிய வைக்க பெரும் முயற்சி எடுத்தார் . மூன்று ஆண்டுகளாகியும் அவரால் எந்த முன்னேற்றமும் காண முடியாததால் விரக்தியில் முயற்சியை கைவிட்டார் . தினம் தினம் இக்கோயிலுக்கு பக்தர்கள் மட்டுமின்றி சுற்றுலா பயணிகளும் அதிகமாக வருகிறார்கள் ..